ஹரியானா மாநிலம் பஞ்சகுவாளில் நடைபெற்ற அகில இந்திய பெண்கள் கால்பந்து அரை இறுதிப் போட்டியில் தமிழக அணியும், ஹரியானா அணியும் மோதியது. இதில் தமிழக அணி வெற்றி பெற்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறி உள்ளது.
தமிழக அணியில் பங்கேற்று விளையாடிய கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திருநாவலூர் கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி முருகன் என்பவரின் மகள் பரமேஸ்வரி தமிழ்நாடு அணிக்காக விளையாடினார். அவர், இன்று தனது சொந்த கிராமத்திற்கு வந்தார். அவருக்கு திருநாவலூர் கிராம பொதுமக்களின் சார்பில் மிகப் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர். அதேபோல், பலரும் கால் பந்து விளையாட்டு வீரர் பரமேஸ்வரிக்கு தங்களது வாழ்த்தைத் தெரிவித்து வருகின்றனர்.