ஒவ்வொரு ஆண்டும் டெல்லியில் ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தின விழா அணிவகுப்பு நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டு வருகின்ற ஜனவரி 26ஆம் தேதி டெல்லியில் நடைபெற உள்ள அணிவகுப்பில் திருச்சி தேசிய கல்லூரி மாணவி பபிதா தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.
இதற்காக பெங்களூருவில் அண்மையில் நடைபெற்ற அணிவகுப்புக்கான தென்னிந்திய முகாமில் கலந்துகொண்ட திருச்சி தேசிய கல்லூரி உடற்கல்வித்துறை 2ம் ஆண்டு மாணவி பபிதா, டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்க தோ்வு செய்யப்பட்டுள்ளார். இதில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள பல்கலைக்கழக, கல்லூரிகளில் பயிலும் மாணவா்கள் பங்கு பெற உள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.