Advertisment

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் (படங்கள்)

ஊரக வாழ்வாதார இயக்கத்தில் பணியாற்றும் வட்டார இயக்க மேலாளர்கள், வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் ஆகிய பணியாளர்களைப்பணி நிரந்தரம் செய்ய வேண்டும்;ஊரக வாழ்வாதார இயக்க அனைத்துப் பணியாளர்களின் ஊதியத்தை அரசு அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்த வேண்டும்;ஊரக வாழ்வாதார இயக்கத்தில் பணியாற்றும் வட்டாரஇயக்க மேலாளர்கள் வட்டார ஒருங்கிணைப்பாளர்களுக்குப் பிற மாநிலங்களில் வழங்கப்படும் ஊதியம் போல் வழங்க வேண்டும்;ஊரக வாழ்வாதார அனைத்துப் பணியாளர்களுக்குக் காப்பீடும் மற்றும் இறந்த பணியாளர்களுக்கு இழப்பீடு மற்றும் வாரிசுகளுக்கு அரசுப் பணி வழங்க வேண்டும்;அனைத்துப் பணியாளர்கள் தினமும் 15 மணி நேரம் பணியாற்றும் நிலையைத்தவிர்த்து 8 மணி நேர வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், அனைத்துப் பணியாளர்கள் நலச் சங்கம் சார்பில் சென்னை வள்ளுவர்கோட்டம் அருகே மாநிலத்தலைவர் ஜெகதீஸ்வரி தலைமையில் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். உடன் மாநில பொதுச் செயலாளர் ஏ. கலைவாணன் உள்ளிட்டோர்இதில் கலந்து கொண்டனர்.

Advertisment

protest
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe