publive-image

Advertisment

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கரூர் தொகுதியின் மக்களவை உறுப்பினரான ஜோதிமணி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "தமிழ் மண்ணின் ஆன்மீக மரபில் ஒரு தனிச்சிறப்பான இடம் ஆதீனங்களுக்கு உண்டு. குன்றக்குடி,பேரூர் உள்ளிட்ட ஆதினங்கள் தமிழ் மண்ணோடும், மரபோடும்,சமூக வாழ்வோடும் இணைந்து பயணிப்பவை. சமூக சீர்திருத்தத்தை முன்னெடுத்தவை. ஆதினங்களின் ஆன்மீகம் அடிப்படையில் ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்திற்கு எதிரானது.

ஆர்எஸ்எஸ்ஊதுகுழலாக ஒலிக்கும் தற்போதைய மதுரை ஆதினம் போன்றவர்கள் ஆபத்தானவர்கள். தமிழகத்தின் தொன்மையான ஆதீன மரபிற்கு களங்கம் விளைவிப்பவர்கள். இவர்களிடம் தமிழகம் எச்சரிக்கையோடு இருக்கவேண்டும்.

ஆர்எஸ்எஸ்குரலாக, ஆதினப் போர்வையில் ஒளிந்துகொண்டு, அமைதி, நல்லிணக்கத்தின் அடையாளமான தமிழக மண்ணில், பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் பேசுபவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது தமிழக அரசு உறுதியான சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும்" என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்தியுள்ளார்.