தமிழகத்தில் கரோன தாக்கம் இரண்டாம் அலையின் போது தீவிரமாக இருந்த நிலையில், அரசின் கடுமையான நடவடிக்கைகளை தொடர்ந்து தற்போது கரோனா கட்டுக்குள் இருந்து வருகிறது. தினரி பாதிப்பு எண்ணிக்கை 1500 என்ற அளவில் தற்போது இருந்து வருகிறது. இந்நிலையில் மாநிலம் முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இதுதொடர்பாக பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன், " தமிழ்நாட்டில் இதுவரை இல்லத அளவாக நேற்றுத 5.72 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது; இந்தியாவிலேயே கர்ப்பிணி தாய்மார்களுக்கு அதிகம் தடுப்பூசி போடப்பட்ட மாநிலம் தமிழ்நாடு தான்" என்றார்.