தமிழக மீனவர்கள் விரட்டியடிப்பு... இலங்கை கடற்படை மீண்டும் மீண்டும் அட்டூழியம்!

Tamil Nadu fishermen chased away .... Sri Lankan Navy atrocities again!

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது, கைது செய்யப்படுவது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. அண்மையில் ராமேஸ்வரத்தை சேர்ந்த 48 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டத்திலும் ஈடுபட்டிருந்தனர்.

அதேபோல் கடந்த 11 ஆம் தேதி கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி 10 க்கும் மேற்பட்ட படகுகள் மீது கற்களை எரிந்து இலங்கை கடற்படையினர் விரட்டியடித்தனர். இந்நிலையில் இன்றும் ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்துள்ளனர். கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களின் பத்துக்கும் மேற்பட்ட விசைப் படகுகள் இலங்கை கடற்படையினரால் விரட்டியடிக்கப்பட்டது. 15க்கும் மேற்பட்ட கப்பல்களில் ரோந்து வந்த இலங்கை கடற்படை தமிழக மீனவர்களின் வலைகளை வெட்டி அட்டூழியம் செய்ததாக மீனவர்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.

fisherman Rameshwaram srilanka Tamilnadu
இதையும் படியுங்கள்
Subscribe