Advertisment
சனாதன ஒழிப்பு குறித்துஇளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். இதற்கு எதிராக சனாதனவாதிகள் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததோடு வழக்குகளை தொடுத்து வருகின்றனர். இதனைக் கண்டித்து இன்று (செப்.8) சைதாப்பேட்டை அரங்கநாதன் சுரங்க பாலம் அருகே தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில பொருளாளர் சைதை ஜெ. தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.