"தங்க மெடல் வாங்கிட்டேன், தந்தையை இழந்துட்டேன்.." - தமிழக வீராங்கனைக்கு நேர்ந்த துயரம்

Tamil Nadu player logapriya father passed away when he bought the gold

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நியூசிலாந்தின்ஆக்லாண்டில் நடந்து வருகிறது. இதில் பளுதூக்கும் போட்டிகளில் பங்கேற்க தமிழ்நாட்டிலிருந்து 11 வீரர் வீராங்கனைகள் பங்கேற்கச் சென்றுள்ளனர். தமிழக அரசு சார்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்வீரர் வீராங்கனைகளுக்கு வாழ்த்து கூறி அனுப்பி வைத்தார். நவம்பர் 28 ஆம்தேதி தொடங்கிய போட்டிகள் டிசம்பர் 4 வரை நடக்கிறது.

இதில் 11 பேரில் 10-க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் பதக்கம் வென்றுதமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளனர். இதில் தஞ்சை மாவட்டத்திலிருந்து சென்ற இருவரில் மாஸ்டர் பிரிவில் 490 கிலோ எடை தூக்கி வெள்ளிப்பதக்கம் பெற்றார் பயிற்சியாளரான பட்டுக்கோட்டை ஜிம் ரவி. இவரிடம் பயிற்சி பெற்ற எம்பிஏ பட்டதாரியான லோகப்பிரியா (வயது 22) 52 கிலோ எடைப் பிரிவில் 350 கிலோ தூக்கி தங்கப்பதக்கம் வென்று இந்தியாவுக்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார். இந்த மகிழ்ச்சி 5 நிமிடம் கூட நீடிக்கவில்லை.

லோகப்பிரியா வெற்றிக்கனி பறிக்கும் வரை காத்திருந்த மாஸ்டர் அனைவரது பாராட்டையும் பெற்று தேசியக் கொடியோடு மெடல் வாங்கிய லோகப்பரியா கீழே இறங்கும் போது சொன்ன தகவல் அவரை அப்படியே நொறுங்கிப் போக வைத்தது. உன் தந்தை காமன்வெல்த் போட்டியை பார்த்துக் கொண்டிருக்கும் போது மாரடைப்பால் மரணமடைந்து விட்டதாக உன் சித்தப்பா தகவல் சொல்கிறார் என்றதும், வெற்றியின் மகிழ்ச்சியை கொண்டாட நினைத்த வீராங்கனை தந்தையை இழந்த துக்கத்தில் கதறி துடித்துக் கொண்டிருக்கிறார். தங்கம் வாங்கணும், சாதிக்கணும் என்று சொல்லிக்கொண்டிருந்த தந்தை, தான் தங்கம் வாங்கியதைப் பார்க்கக் கூட இல்லாமல் போய்விட்டாரே எனக் கண்ணீர் வடியக் கதறியது அனைவரையும் கரையவைத்தது. இதையடுத்து அவரை ஆறுதல் கூறி அறையில் தங்க வைத்துள்ளனர்.

Tamil Nadu player logapriya father passed away when he bought the gold

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே கல்லுக்காரன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த செல்வமுத்து மகள் தான் லோகப்பரியா. இவருடன் 2 சகோதரிகள் உள்ளனர். தந்தை சில வருடங்களாக சொந்த ஊரில் தங்கிவிட, தன் மகள் சாதனை படைக்க வேண்டும் என்ற வெறியோடு தாய் பட்டுக்கோட்டையில் ஒரு பொதுக்கழிவறையில் வசூல் செய்யும் வேலை செய்கிறார்.

இத்தனை ஏழைக் குடும்பத்தில் பிறந்து பயிற்சியாளர் ரவியின் தொடர் பயிற்சியால் பளுதூக்குவதில் பல மெடல்களை வென்ற வீராங்கனை லோகப்பிரியா இன்று காமன்வெல்த் போட்டியிலும் வென்று பெருமை சேர்த்திருக்கிறார். இந்த வெற்றியை ஊரே கொண்டாட வேண்டிய நேரத்தில் தந்தையின் இழப்பு வெற்றிக் கொண்டாட்டத்தை தவிர்க்க வேண்டியதாய் ஆக்கிவிட்டது.

Tamilnadu
இதையும் படியுங்கள்
Subscribe