ஆசியாவின் சிறந்த தடகள வீரராக தமிழக வீரர் தேர்வு; முதல்வர் வாழ்த்து

Tamil Nadu Player Chosen as Asia's Best Athlete; Greetings from the Chief Minister

சமீபத்தில் நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 20 வயதுக்கு உட்பட்டோருக்கான மும்முறை தாண்டுதலில் (ட்ரிப்பிள் ஜம்) தமிழ்நாட்டைச் சேர்ந்த செல்வபிரபு திருமாறன் கலந்துகொண்டு வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார். இதையடுத்து ஆசியாவின் சிறந்த ஜூனியர் தடகள வீரர் என்ற அங்கீகாரம் செல்வபிரபு திருமாறனுக்கு கிடைத்துள்ளது. இதனைத்தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் செல்வபிரபு திருமாறனுக்கு வாழ்த்துகளைத்தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில், “மென்மேலும் புதிய சாதனைகளைப் படைத்துத் தடகளப் பிரிவில் தமிழ்நாட்டின் நம்பிக்கை நட்சத்திரமாக மேலெழுந்து வரும் செல்வபிரபு திருமாறன் அவர்களுக்குப் பாராட்டுகள்” எனத்தெரிவித்துள்ளார்.

முன்னதாக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ட்விட்டரில், “ஆசியாவின் சிறந்த ஜுனியர் (20 வயதுக்கு உட்பட்டோருக்கான) தடகள வீரராக நம் தமிழ்நாட்டின்வீரர் செல்வபிரபு தேர்வு செய்யப்பட்டுள்ளது அறிந்து மகிழ்ந்தேன். ஆசிய தடகள சம்மேளத்தின் இந்த மதிப்பிற்குரிய விருதினைப் பெற்று தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ள செல்வபிரபுவுக்கு வாழ்த்துகள். அவரது திறமைக்கு உலக அரங்கில் இன்னும் பல அங்கீகாரங்கள் கிடைப்பதற்குதிமுக அரசு என்றும் துணை நிற்கும்” எனத்தெரிவித்துள்ளார்.

Athlete
இதையும் படியுங்கள்
Subscribe