ADVERTISEMENT

'தமிழ்நாட்டு மக்கள் மிகவும் நல்லவர்கள்'- ஆளுநர் ஆர்.என்.ரவி ட்வீட்

09:58 AM Mar 05, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

திருப்பூரில் வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக வெளியான தகவல்கள் தொடர்பான விவகாரத்தில் வதந்தி பரப்பியவர் மீது பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது, சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்புவது உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக வெளியான போலி தகவலைத் தொடர்ந்து தமிழக முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதன் பின்னர் தமிழக முதல்வர் சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், “புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றி வதந்தி பரப்புவோர் இந்திய நாட்டுக்கே எதிரானவர்கள். வதந்தி பரப்புவோர் நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவிப்பவர்கள். புலம்பெயர் தொழிலாளர்களை வைத்து சிலர் கீழ்த்தரமாக அரசியல் செய்வது கடும் கண்டனத்திற்குரியது. வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு என்பதை தமிழர்களை விட புலம்பெயர் தொழிலாளர்கள் அழுத்தமாகச் சொல்வார்கள். புலம்பெயர் தொழிலாளர்கள், தோழர்கள் எவ்வித அச்சமும் அடைய வேண்டாம். யாரேனும் அச்சுறுத்தினால் காவல்துறை உதவி எண்களுக்கு புலம்பெயர் தொழிலாளர்கள் தகவல் தெரிவிக்கலாம். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாநில தொழிலாளர்களுக்கும் திமுக அரசும் தமிழ்நாட்டு மக்களும் அரணாக இருப்பார்கள். சமூக ஊடகங்களை; வலைத்தளங்களைப் பயன்படுத்துபவர்கள் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழக ஆளுநர் இந்த விவகாரம் தொடர்பாக வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், 'தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் பீதியடைந்து பாதுகாப்பற்ற உணர்வுடன் இருக்க வேண்டாம். தமிழ்நாட்டு மக்கள் மிகவும் நல்லவர்கள் மற்றும் நட்பானவர்கள் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் மாநில அரசு உறுதியுடன் இருக்கிறது' என தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT