Advertisment

முல்லைப் பெரியாறு அணைக்கு ஆய்வுக்கு சென்ற தமிழக அதிகாரிகளுக்கு அனுமதி மறுப்பு! கேரளா அரசின் அடாவடி!!

முல்லைப் பெரியாறு அணைக்கு ஆய்வு பயிற்சிக்காக சென்ற தமிழக பொதுப்பணித்துறை குழுவினருக்கு கேரள வனத் துறையினர் அனுமதி மறுத்தனர்.

Advertisment

திருச்சி மாவட்டத்திலுள்ள துவாக்குடியில் நீர் பாசன மேலாண்மை பயிற்சி நிறுவனம் உள்ளது.இந்த நிறுவனத்தின் சார்பில் தமிழகத்தில் உள்ள பொதுப்பணித்துறை அதிகாரிகள் பணியாளர்களுக்கு பெரியாறு வைகை வடிநிலப் பகுதிகளில் தல ஆய்வு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்தப் பயிற்சிக்காக தேர்வு செய்யப்பட்ட 27 பேர் கொண்ட குழுவினர் கேரளாவில் உள்ள இடுக்கி அணை முல்லைப் பெரியாறு மற்றும் வைகை அணை முதல் ராமநாத வரையிலான கால்வாய் ஆறுகள் போன்ற பகுதிகளில் நேரில் ஆய்வு செய்து பயிற்சி பெற உள்ளனர்.

Advertisment

 Tamil Nadu officials who went to study in Mullaiperiyar dam denied permission! Kerala Government

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

இதற்காக இந்த குழுவினர் நேற்று கேரள மாநிலம் இடுக்கியில் உள்ள இடுக்கி அணைக்கு சென்று பார்வையிட்டனர். அதன் பின்னர் அங்கிருந்து முல்லைப் பெரியாறு அணைக்கு செல்வதற்காக தேக்கடி வந்தனர். அவர்களுடன் முல்லைப் பெரியாறு அணையின் உதவி கோட்ட பொறியாளர் சாம்இர்வின் மற்றும் பொறியாளர்கள் சிலரும் வந்திருந்தனர். இப்படி வந்த தமிழக அதிகாரிகளை தேக்கடி ஏரிக்கு செல்லும் சாலையில் உள்ள கேரள வனத்துறை சாவடியில் குழுவினரை வனத்துறையினர் தடுத்து நிறுத்தினர். அவர்கள் முறையான அனுமதி பெறவில்லை என்று கூறி அவர்களை முல்லைப் பெரியாறு அணைக்கு செல்ல அனுமதி மறுத்தனர்.

 Tamil Nadu officials who went to study in Mullaiperiyar dam denied permission! Kerala Government

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

அப்போது கேரள வனத்துறை இணை இயக்குனர் ஷில்பா அங்கு வந்தார். அவரும் அனுமதி வழங்க முடியாது என்று தெரிவித்தார். அப்படி இருந்தும் மதியம் 2 மணிக்கு வந்த தமிழக குழுவினர் மாலை 5 மணி வரை அங்கேயே அனுமதிக்காக காத்து இருந்தனர். ஆனால் இறுதிவரை கேரள வனத்துறையினர் அனுமதி கொடுக்காமல் திருப்பி அனுப்பப்பட்டனர். இதனால் அந்த குழுவினர் ஏமாற்றத்துடன் திரும்பி திருச்சி இரவு சென்றனர்.

இதுசம்மந்தமாக உதவி கோட்ட பொறியாளர் சாம் இர்வினிடம் கேட்டபோது..... முல்லை பெரியாறு மற்றும் வைகை வடிநிலை பகுதிகளில் தல ஆய்வு பயிற்சிக்காக தமிழக பொதுப்பணித்துறை குழுவினர் அழைத்து வரப்பட்டனர். காலையில் இடுக்கி அணையை பார்த்துவிட்டு முல்லை பெரியாறு அணையை பார்வையிட வந்தபோது கேரள வனத் துறையினர் அனுமதி மறுத்துவிட்டனர். முல்லைப் பெரியாறு அணையை பார்வையிட அனுமதிக்காக கேரள வனத்துறைக்கு எழுத்துபூர்வமாக தகவல் தெரிவித்திருந்தோம். ஆனால் அனுமதி கொடுக்கவில்லை.இதனால் அணைக்கு செல்ல முடியவில்லை இதையடுத்து மலையில் தேக்கடியில் உள்ள மின் உற்பத்தி நிலையத்திற்கு குழாய் மூலம் தண்ணீர் திறக்கப்படும் இடத்தில் உள்ள வைகை அணை மின் உற்பத்தி நிலையம் கால்வாய் போன்ற பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர் தொடர்ந்து வைகைஅண உள்ளிட்ட பிற பகுதிகளை பார்வையிட இருக்கிறார்கள் என்று கூறினார்.

ஆனால் தமிழகத்திற்கு சொந்தமான முல்லை பெரியார் அணையை தமிழக அதிகாரிகள் ஆய்வு செய்வதற்கே கேரள வனத் துறையினர் அனுமதிக்காமல் அடாவடி செய்து தமிழக அதிகாரிகளை திருப்பி அனுப்பியது தேனி மாவட்டத்தில் உள்ள தமிழக கேரளாஎல்லையில் உள்ள கம்பம் பள்ளத்தாக்கு பொதுமக்கள் மத்தியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

forest mullai periyaru dam
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe