Skip to main content

முல்லைப் பெரியாறு அணைக்கு ஆய்வுக்கு சென்ற தமிழக அதிகாரிகளுக்கு அனுமதி மறுப்பு! கேரளா அரசின் அடாவடி!!

Published on 06/02/2019 | Edited on 06/02/2019

முல்லைப் பெரியாறு அணைக்கு ஆய்வு பயிற்சிக்காக சென்ற தமிழக பொதுப்பணித்துறை குழுவினருக்கு கேரள வனத் துறையினர் அனுமதி மறுத்தனர். 

 

திருச்சி மாவட்டத்திலுள்ள துவாக்குடியில் நீர் பாசன மேலாண்மை பயிற்சி நிறுவனம் உள்ளது.இந்த நிறுவனத்தின் சார்பில் தமிழகத்தில் உள்ள பொதுப்பணித்துறை அதிகாரிகள் பணியாளர்களுக்கு பெரியாறு வைகை வடிநிலப் பகுதிகளில் தல ஆய்வு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்தப் பயிற்சிக்காக தேர்வு செய்யப்பட்ட 27 பேர் கொண்ட குழுவினர் கேரளாவில் உள்ள இடுக்கி அணை முல்லைப் பெரியாறு மற்றும் வைகை அணை முதல் ராமநாத வரையிலான கால்வாய் ஆறுகள் போன்ற பகுதிகளில் நேரில் ஆய்வு செய்து பயிற்சி பெற உள்ளனர். 

 

 Tamil Nadu officials who went to study in Mullaiperiyar dam denied permission! Kerala Government

 

இதற்காக இந்த குழுவினர் நேற்று கேரள மாநிலம் இடுக்கியில் உள்ள இடுக்கி அணைக்கு சென்று பார்வையிட்டனர். அதன் பின்னர் அங்கிருந்து முல்லைப் பெரியாறு அணைக்கு செல்வதற்காக தேக்கடி வந்தனர். அவர்களுடன் முல்லைப் பெரியாறு அணையின் உதவி கோட்ட பொறியாளர் சாம்இர்வின்  மற்றும் பொறியாளர்கள் சிலரும் வந்திருந்தனர். இப்படி வந்த  தமிழக அதிகாரிகளை தேக்கடி ஏரிக்கு செல்லும் சாலையில் உள்ள கேரள வனத்துறை சாவடியில் குழுவினரை வனத்துறையினர் தடுத்து நிறுத்தினர். அவர்கள் முறையான அனுமதி பெறவில்லை என்று கூறி அவர்களை முல்லைப் பெரியாறு அணைக்கு செல்ல அனுமதி மறுத்தனர்.

 

 Tamil Nadu officials who went to study in Mullaiperiyar dam denied permission! Kerala Government

 

 அப்போது கேரள வனத்துறை இணை இயக்குனர் ஷில்பா அங்கு வந்தார். அவரும் அனுமதி வழங்க முடியாது என்று தெரிவித்தார். அப்படி இருந்தும் மதியம் 2 மணிக்கு வந்த தமிழக குழுவினர் மாலை 5 மணி வரை அங்கேயே அனுமதிக்காக காத்து இருந்தனர். ஆனால் இறுதிவரை கேரள வனத்துறையினர் அனுமதி கொடுக்காமல் திருப்பி அனுப்பப்பட்டனர். இதனால் அந்த குழுவினர் ஏமாற்றத்துடன் திரும்பி திருச்சி இரவு  சென்றனர்.

 

 

இதுசம்மந்தமாக உதவி கோட்ட பொறியாளர் சாம் இர்வினிடம் கேட்டபோது..... முல்லை பெரியாறு மற்றும் வைகை வடிநிலை பகுதிகளில் தல ஆய்வு பயிற்சிக்காக தமிழக பொதுப்பணித்துறை குழுவினர் அழைத்து வரப்பட்டனர். காலையில் இடுக்கி அணையை  பார்த்துவிட்டு முல்லை பெரியாறு அணையை பார்வையிட வந்தபோது கேரள வனத் துறையினர் அனுமதி மறுத்துவிட்டனர். முல்லைப் பெரியாறு அணையை பார்வையிட அனுமதிக்காக கேரள வனத்துறைக்கு எழுத்துபூர்வமாக தகவல் தெரிவித்திருந்தோம். ஆனால் அனுமதி கொடுக்கவில்லை. இதனால் அணைக்கு செல்ல முடியவில்லை இதையடுத்து மலையில் தேக்கடியில் உள்ள மின் உற்பத்தி நிலையத்திற்கு குழாய் மூலம் தண்ணீர் திறக்கப்படும் இடத்தில் உள்ள வைகை அணை மின் உற்பத்தி நிலையம் கால்வாய் போன்ற பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர் தொடர்ந்து வைகைஅண உள்ளிட்ட பிற பகுதிகளை பார்வையிட இருக்கிறார்கள் என்று கூறினார்.

 

 

 

ஆனால் தமிழகத்திற்கு சொந்தமான முல்லை பெரியார் அணையை தமிழக அதிகாரிகள் ஆய்வு செய்வதற்கே கேரள வனத் துறையினர் அனுமதிக்காமல் அடாவடி செய்து தமிழக அதிகாரிகளை திருப்பி அனுப்பியது தேனி மாவட்டத்தில் உள்ள தமிழக கேரளா எல்லையில் உள்ள கம்பம் பள்ளத்தாக்கு பொதுமக்கள்  மத்தியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முல்லைப் பெரியாறு அணை விவகாரம்; தமிழக அரசு அதிரடி முடிவு!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Mullai Periyar Dam Issue TN govt decision

முல்லைப் பெரியாறு அணைப்பகுதியில் மிகப்பெரிய நான்கு சக்கர வாகன நிறுத்தம் அமைக்கும் பணியில் கடந்த 2013 ஆண்டு முதல் கேரள அரசு ஈடுபட்டு வருகிறது. இதையடுத்து முல்லைப் பெரியாறு அணையின் நீர்த்தேக்கப் பகுதிகள் தமிழகத்திற்கு குத்தகைக்கு விடப்பட்டிருப்பதால், அதில் கட்டுமானப் பணிகள் நடைபெறும் பகுதியில் கட்டுமான பணிகள் மேற்கொள்ள அனுமதி இல்லை என்று தெரிவித்தும், கேரளா அரசின் முடிவை எதிர்த்தும் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தது.

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது நீதிபதி, “நில அளவை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்படும் மேற்பார்வைக் குழுவின் தலைமையில் கேரளா மற்றும் தமிழகத்தை உள்ளடக்கிய கூட்டு சர்வே நடத்த வேண்டும்” என தெரிவித்திருந்தார். இதனையடுத்து இது தொடர்பான அய்வு குழுவினரால் ஆய்வு மேற்கொண்டு உச்ச நீதிமன்றத்தில் ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அந்த ஆய்வறிக்கையில், ‘கேரள அரசு கட்டிவரும் வாகன நிறுத்துமிடம் குத்தகை பகுதிக்குள் இல்லை. நீர்பிடிப்பு மற்றும் நீர் பரவல் பகுதியின் எல்லைகள் பெரியாறு, குமுளி கிராமத்தில் உள்ளன’ என வரைபடத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Mullai Periyar Dam Issue TN govt decision

இந்நிலையில் முல்லைப் பெரியாறு அணை பகுதியில் வாகன நிறுத்துமிடம் கட்டுவது தொடர்பாக இந்திய நில அளவைத் துறை அளித்த ஆய்வறிக்கையை ஏற்க முடியாது என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், “கடந்த 1924 ஆம் ஆண்டு நீர்வளத்துறையால் தயாரிக்கப்பட்ட வரைபடத்தை தற்போதைய ஆய்வு குழு கணக்கில் கொள்ளவில்லை. கேரளா கட்டிவரும் மிகப்பெரிய வாகன நிறுத்துமிடத்தின் மூலப்பகுதி, தரைத்தளம் எங்கு உள்ளது என்பதை ஆய்வு குழு ஆய்வு செய்யவில்லை. வாகன நிறுத்துமிடத்தின் எல்லை நிர்ணயிக்கப்பட்ட போது தமிழ்நாடு அரசின் கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை.

மெகா வாகனம் நிறுத்துமிடம் என்பது உணவகம், வாகன பேட்டரி சார்ஜ் செய்யும் இடம், கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை உள்ளடக்கியது ஆகும். எனவே வாகன நிறுத்துமிடத்தை அளவிடும் போது அதன் சார்பு வசதிகளை கணக்கில் எடுக்க நில அளவைத் துறை தவறிவிட்டது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

சிக்காத சிறுத்தை! பிடிக்க முடியாமல் தடுமாறும் வனத்துறை!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
 forest department is struggling to catch the elusive leopard

கடந்த 2ஆம் தேதி மயிலாடுதுறை சுற்றியுள்ள பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் கண்டறியப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் அளித்தனர். ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இருந்து பயிற்சி பெற்ற அனுபவம் வாய்ந்த வனத்துறையினர் மற்றும் அதிகாரிகளை வரவழைத்து, தனிக்குழு அமைத்து அந்தச் சிறுத்தையின் நடமாட்டத்தைத் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

அதன்படி, சிறுத்தையின் காலடித்தடம் அது சிறுநீர் கழித்ததற்கான அடையாளம், அதன் கழிவு ஆகியவற்றை அடையாளம் கண்டு, சிறுத்தை மயிலாடுதுறை பகுதியில் நடமாடுவதை உறுதி செய்தனர். அதைப் பிடிப்பதற்காக வனத்துறையினர் பல்வேறு முயற்சிகளை செய்து வந்த நிலையில், நான்கு தினங்களுக்கு முன் அரியலூர் மாவட்டம் செந்துறை நகரப் பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தை பொதுமக்கள் பார்த்தனர். இது குறித்து அரியலூர் வனத்துறை மற்றும் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அப்பகுதி இளைஞர்களுடன் சிறுத்தையைப் பிடிப்பதற்கு முயற்சி செய்தனர்.

 forest department is struggling to catch the elusive leopard

ஒரு லேத் பட்டறையில் பதுங்கி இருந்த சிறுத்தை அங்கிருந்து தப்பி ஓடியதைப் பலரும் பார்த்தனர். இதையடுத்து சிறப்பு குழுவினர் பெரிய கூண்டை கொண்டு வந்து செந்துரை அருகே உள்ள ஓடை பகுதியில் கூண்டுக்குள் ஆட்டை அடைத்து வைத்தனர். ஆடு கத்தும் சத்தத்தை கேட்டு ஆட்டை உணவாக சாப்பிட்டு சிறுத்தை அந்த கூண்டை தேடி வரும் அப்போது அதில் மாட்டிக்கொள்ளும் வகையில் தயார் நிலையில் வைத்திருந்தனர். ஆனால் சிறுத்தை அந்தக் கூண்டுக்குள் வந்து சிக்கவில்லை.

இதைத்தொடர்ந்து செந்துறையைச் சுற்றிலும் உள்ள முந்தரிக்காட்டு பகுதிகளுக்குள் சிறுத்தை பதுங்கி இருக்கலாம் என்று ட்ரோன் கேமரா மூலம் தேடுதல் வேட்டை நடத்தினர். சிறுத்தை நடமாட்டத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. சிறுத்தை அரியலூர் மாவட்டத்திலிருந்து பெரம்பலூர் மாவட்டம் அல்லது அருகில் உள்ள கடலூர் மாவட்ட பகுதிகளுக்குள் சென்று இருக்கலாம் என்று வனத்துறையினர் கூறுகின்றனர். தற்போது நிலவரப்படி தினசரி ஒரு நாளைக்கு சுமார் 10 முதல் 15 கிலோமீட்டர் வரை சிறுத்தை இரவு நேரங்களில் இடம்பெயர்ந்து சென்றுள்ளது.

 forest department is struggling to catch the elusive leopard

இதனடிப்படையில் அரியலூர், பெரம்பலூர் மற்றும் கடலூர் மாவட்ட எல்லைய ஒட்டிய கிராமங்களில் வனத்துறையினர் தங்களது கண்காணிப்பைத் தீவிர படுத்தியுள்ளனர். இதனைப்போன்று கடந்த 2013 ஆம் ஆண்டு பெரம்பலூர் நகரை ஒட்டி உள்ள பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருந்ததை பொதுமக்கள் பார்த்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அப்போது பெரம்பலூர் அருகில் உள்ள துறைமங்கலம், கவுல்பாளையம் ஆகிய பகுதிகளில் சிறுத்தையைத் தேடும் பணி தீவிரமாக நடந்தது. நீண்ட முயற்சிக்குப் பிறகு அப்பகுதியில் சிறுத்தையைப் பிடிக்க கூண்டுக்குள் ஆட்டை விட்டு காட்டுப்பகுதியில் வைத்தனர். அப்போது அந்தச் சிறுத்தை ஆடு கத்தும் சத்தத்தை கேட்டு அதை கடித்து தின்பதற்காக கூண்டுக்குள் சென்று சிக்கியது. இதனையடுத்து அங்கு சென்ற வனத்துறையினர், அந்தச் சிறுத்தையை சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு கொண்டு சென்று விட்டனர். இவ்வாறு சில ஆண்டுகளுக்கு ஒரு முறை பெரம்பலூர் ,அரியலூர்,மாவட்டங்களில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.