ஏழு நாட்கள் துக்கம் அனுசரிக்கும் தமிழக அரசு...

Tamil Nadu observes seven days of mourning for pranab mukherjee

முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜியின் இறப்பையொட்டி தமிழகத்தில் ஏழு நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவின் 13 -ஆவது குடியரசு தலைவராக 2012 முதல் 2017 வரை பதவி வகித்த பிரணாப் முகர்ஜி கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு டெல்லி ராணுவ மருத்துவமனையில் மூளை அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. மேலும், சுவாசம் மற்றும் சிறுநீரக பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்த அவர் கடந்த சில நாட்களாக ஆழ்ந்த கோமா நிலையில் இருந்துவந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று அவர் காலமானார்.

இந்நிலையில் பிரணாப் முகர்ஜியின் இறப்பையொட்டி தமிழகத்தில் ஏழு நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், பிரணாப் முகர்ஜி இறப்பு குறித்து தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், "மாண்புமிகு முன்னாள் குடியரசு தலைவரும் மூத்த அரசியல் தலைவருமான பிரணாப் முகர்ஜியின் அவர்களின் மறைவு இந்தியாவிற்கே பேரிழப்பு! சிறந்த ஆட்சியாளரும், கடின உழைப்பாளியுமான பிரணாப் முகர்ஜி அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், இந்திய மக்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்!" எனத் தெரிவித்துள்ளார்.

admk Pranab Mukherjee
இதையும் படியுங்கள்
Subscribe