Skip to main content

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்; 1000க்கும் மேற்பட்டோர் திரண்டதால் பரபரப்பு!

Published on 07/12/2024 | Edited on 07/12/2024
Tamil Nadu Muslim Progressive Party members struggle

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் திருச்சி மண்டலம் சார்பாக டிசம்பர் 06 பயங்கரவாத எதிர்ப்பு நாளில் வழிபாட்டுத்தலங்கள், வக்பு சொத்துக்கள் பாதுகாப்புக்காக மாபெரும் மக்கள் திரள் ஆர்பாட்டம் பாலக்கரையில் துணை பொது செயலாளர் தஞ்சை பாதுஷா  தலைமையில்  நடைபெற்றது. திருச்சி கிழக்கு மாவட்ட தலைவர் முகமது ராஜா வரவேற்றார்.

திருச்சி மேற்கு மாவட்ட தலைவர் கவுன்சிலர் பைஸ் அஹமது , புதுக்கோட்டை மாவட்ட தலைவர் அப்துல் கனி, பெரம்பலூர் மாவட்ட தலைவர் குதரதுல்லா, கரூர் மாவட்ட தலைவர் சாகுல் அமீது மற்றும் அரியலூர் மாவட்ட தலைவர் சாகுல் ஹமீது ஆகியோர் உள்ளிட்ட தலைமை கழக நிர்வாகிகள், மாநில துணை செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள், மண்டல செயலாளர்கள்,  நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். தமுமுக தலைமை கழக பேச்சாளர் கோவை சையது, காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் , தலைமை பிரதிநிதிகள் நூர்தீன், ஜெய்னுலாபுதீன், தாஹிர் பாஷா, ஐ.பி.பி. மாநில துணை செயலாளர் முகமது ரபீக் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். முடிவில் மேற்கு மாவட்ட செயலாளர் இப்ராஹிம் ஷா  நன்றி கூறினார்.

இப்போராட்டத்தில் மமக மாவட்ட செயலாளர் இப்ராஹிம், மாவட்ட பொருளாளர் ஹுமாயூன் கபீர், மாவட்ட துணை தலைவர் மணவை அக்பர், மாவட்ட துணை செயலாளர்கள் அப்துல் சமது, ஹுமாயூன் கபீர், அப்துல் ரஹீம், இம்ரான், அப்துல் சமது, அசாருதீன், மாவட்ட தொண்டரணி, இளைஞர் அணி, விளையாட்டு அணி, இஸ்லாமிய பிரச்சார பேரவை மற்றும் சமூக நீதி மாணவர் இயக்கம், மருத்துவ சேவை அணிகளின் நிர்வாகிகள், தமிழ்நாடு முஸ்லிம் மகளீர் பேரவை நிர்வாகிகள் மற்றும் பகுதி கழக நிர்வாகிகள், ஒன்றிய, நகர நிர்வாகிகள், வார்டு கிளை நிர்வாகிகள், பொதுமக்கள், ஜமாத் பெரியவர்கள், சமூக நல ஆர்வலர்கள், முற்போக்கு சிந்தனையாளர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர்  கலந்து கொண்டனர்.

சார்ந்த செய்திகள்