Advertisment

கேரளா சென்றது தமிழக மருத்துவக்குழு !

கேரள மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் பெரும்பாலான மாவட்டத்தில் வெள்ளத்தில் சிக்கி தவித்து வந்தவர்களை மீட்பு குழுவினர் மீட்டு அங்கங்கே உள்ள முகாம்களில் தங்கவைத்து வருகிறார்கள் இப்படி மீட்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவிகள் செய்வதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மருத்துவக்குழுக்கள் கேரளா விரைந்துள்ளனர். முன்னதாக சில மருத்துவக்குழுக்கள் கேரளா சென்று அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலமாகவும், அங்கு அமைக்கப்பட்டுள்ள மருத்துவ முகாம்களுடன் இணைந்தும் மருத்துவ உதவி செய்துவருகின்றனர்.

Advertisment

kerala

இந்த நிலையில் தேனி மாவட்ட பொதுசுகாதாரம் மற்றும் இணை இயக்குனர் வரதராஜனிடம் கேட்டபோது...தேனி மாவட்டத்தில் இருந்து நேற்று காலை நான்கு மருத்துவக்குழு கேரளா சென்றுள்ளது. ஒரு குழுவில் மருத்துவர், செவிலியர் உட்பட ஐந்து பேர் இருப்பர். மேலும் மூன்று குழுக்கள் தயார் நிலையில் உள்ளது. அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்தும் வரும் மருத்துவக்குழுக்களுடன் இணைந்து செல்வார்கள். இதற்கு முன்பு சென்ற மருத்துவக்குழு, கம்பம் மெட்டு வழியாக கட்டப்பனை சென்று, அங்குள்ள கேரள மருத்துவக்குழுக்களின் வழிகாட்டுதலில் மற்ற இடங்களுக்குச் சென்று மருத்துவ உதவிகளை செய்துவருகிறார்கள். அவர்கள் செல்லும் போதே தேவையான மருந்துகளை கொண்டுசென்றுள்ளனர். மேலும் தற்பொழுது மருந்துகளை கொடுத்து அனுப்ப இருக்கிறோம் என்று கூறினார்.

Advertisment

இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்றும் மூன்று வாகனங்களில் அரிசி, காய்கறி, பருப்பு, பால்பவுடர், துணி வகைகள் மற்றும் பிளீச்சிங் பவுடர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த பொருள்கள் கம்பம் மெட்டு வழியாக கட்டப்பனைக்கு கொண்டு போகப்படுகிறது அங்கிருந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கி இருக்கும் முகாம்களுக்கு இந்த பொருள்களை பிரித்து அனுப்பவும் இருக்கிறார்கள்.

flood medicine kerala flood
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe