அக்.17- ஆம் தேதி கூடுகிறது தமிழக சட்டப்பேரவைக் கூட்டம்! 

The Tamil Nadu Legislative Assembly meeting will be held on October 17!

சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக சட்டப்பேரவையின் சபாநாயகர் அப்பாவு, "வரும் அக்டோபர் 17- ஆம் தேதி அன்று தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் கூடுகிறது. சட்டப்பேரவைக் கூட்டம் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடத்தி முடிவெடுக்கப்படும்.

சட்டமன்ற மரபுப்படியே ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இருவரும் பேரவையில் அமர வைக்கப்படுவர். சட்டப்பேரவையில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி அணிகளுக்கான இருக்கைகள் குறித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். துணை நிதிநிலை அறிக்கை இக்கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.

APPAVU speaker
இதையும் படியுங்கள்
Subscribe