Skip to main content

தமிழக இடைக்கால பட்ஜெட் தாக்கல் தேதி அறிவிப்பு 

Published on 16/02/2021 | Edited on 16/02/2021

 

 Tamil Nadu Interim Budget to be tabled on February 23

 

கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கத்தில் தொடங்கிய தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் ஆன்லைன் சூதாட்டத்திற்குத் தடை விதிக்கும் சட்டத்திற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பெயரில் துவங்கப்படும் பல்கலைக்கழகத்திற்கான சட்ட மசோதா உட்பட 8 முக்கிய மசோதாக்கள் வாய்மொழி வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டன. பின்னர் சட்டப்பேரவைக் கூட்டமானது தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

 

அதனையடுத்து கடந்த 13-ஆம் தேதி அமைச்சரவைக் கூட்டம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில், வரும் பிப்.23 ஆம் தேதி தமிழக நிதியமைச்சரும், துணை முதல்வருமான ஓ.பி.எஸ் இடைக்கால பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யவுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழக வேளாண் பட்ஜெட் இன்று தொடக்கம் 

Published on 20/02/2024 | Edited on 20/02/2024
Tamil Nadu Agriculture Budget begins today

இந்த ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த 12 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 2024 - 2025 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று (19.02.2024) காலை 10 மணியளவில் தாக்கல் செய்தார். அதன்படி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு புதிய திட்டங்களை அறிவித்தார்.

இந்த நிலையில், சட்டப்பேரவையில் இன்று (20-02-24) 2024 - 2025ஆம் ஆண்டுக்கான தமிழக வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. அதனை தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். இதில் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், வேளாண் வணிக பிரிவுக்கான திட்டங்கள் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்படுகிறது. மேலும், கூட்டுறவு, பால்வளம், மீன்வளம், கால்நடை பராமரிப்பு உள்ளிட்ட விவசாயிகள் தொடர்புடைய திட்டங்களும் அறிவிக்கப்பட இருக்கிறது. 

கடந்த 2023 - 2024ஆம் நிதியாண்டுக்கான வேளாண் பட்ஜெட்டில் ரூ.38,904 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில், 2024 - 2025ஆம் நிதியாண்டிற்கான வேளாண் பட்ஜெட் நிதி ஒதுக்கீடு சற்று உயர்ந்து இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Next Story

சசிகலா மேல்முறையீட்டு மனுவில் இன்று விசாரணை

Published on 30/08/2023 | Edited on 30/08/2023

 

nn

 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக இரண்டாகப் பிரிந்த நேரத்தில் சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை சென்றார். அதன்பின் ஓபிஎஸ் அணியும் எடப்பாடி பழனிசாமி அணியும் ஒன்று சேர்ந்தது. அதிமுக பொதுச் செயலாளராக இருந்த சசிகலாவின் பதவியைப் பறித்ததோடு, 2017 ஆம் ஆண்டு செப்டம்பரில் நடந்த பொதுக்குழுவில் அதிமுகவிலிருந்து சசிகலா மற்றும் தினகரனை நீக்கினர். அதேபோல் அதிமுகவில் பொதுச் செயலாளர் என்ற பதவியே நீக்கப்பட்டு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகள் புதியதாகக் கொண்டுவரப்பட்டது. தற்பொழுது ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் எடப்பாடி வசம் அதிமுக சென்றுள்ளது.

 

அதனைத் தொடர்ந்து, ‘அதிமுக பொதுச்செயலாளர் பதவியிலிருந்து தன்னை நீக்கிய பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும்; பொதுச்செயலாளர் இல்லாமல் நடந்த பொதுக்குழு மற்றும் பதவி நீக்கம் செல்லாது.’ என சசிகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். ‘அதிமுகவிலிருந்து சசிகலாவை நீக்கியது செல்லும்' என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து சசிகலாவின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் சென்னை உரிமையியல் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சசிகலா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மேல்முறையீட்டு வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.