Advertisment

தமிழ்நாடு இல்ல புதிய கட்டடம்; முதல்வர் அடிக்கல் நாட்டினார்!

Tamil Nadu House New Building The Chief Minister laid the foundation stone

Advertisment

டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 18 ஆம் தேதி (18.06.2021) கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், டெல்லி மிக தீவிர நில அதிர்வு மண்டலம் நான்காக (IV)மறுவகைப்படுத்தப்படுத்துள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு வைகை தமிழ்நாடு இல்ல வளாகத்தினை பழைய கட்டடங்களை முழுவதுமாக இடித்து மறுமேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள விரிவான ஆலோசனை நடத்தினார். அதன்படி, விரிவான வடிவமைப்பு மற்றும் வரைபடங்கள் தயாரிக்கப்பட்டு, சம்மந்தப்பட்ட அலுவலகங்களிலிருந்து உரிய ஒப்புதல்கள் பெறப்பட்டன.

புதியதாக கட்டப்படவுள்ள இக்கட்டடம் மிக தீவிர நில அதிர்வை எதிர்கொள்ளும் கட்டமைப்பாக வடிவமைக்கப்பட்டு இந்திய தொழில்நுட்பக்கழகம். சென்னை (IIT, Madras) மூலம் ஆய்வு செய்யப்பட்டது. தமிழ்நாடு அரசின் பொதுத் துறையால் புதுதில்லி தமிழ்நாடு இல்லத்தை மறுசீரமைத்து புதிய கட்டடங்களை கட்டுவதற்கு 257 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

Tamil Nadu House New Building The Chief Minister laid the foundation stone

Advertisment

டெல்லி சாணயக்யபுரியில் உள்ள வைகை தமிழ்நாடு இல்லத்திற்கான மறுமேம்பாட்டு திட்டத்தில் கட்டப்படவுள்ள இப்புதிய கட்டடம் மிக முக்கிய பிரமுகர் தொகுதி, விருந்தினர் மாளிகை தொகுதி, அலுவலர்கள் குடியிருப்புத் தொகுதி ஆகியவற்றை உள்ளடக்கியது. மற்றும் 7 மேல் தளங்களைக் கொண்டதாகவும். மொத்தம் 3 இலட்சம் சதுர அடி பரப்பளவில் கட்டப்படவுள்ளது. மேலும், மிக முக்கிய பிரமுகர் அறை, 39 முக்கிய பிரமுகர்கள் அறைகள், 60 உயர்தர அறைகள், 72 படுக்கை வசதிகள் கொண்ட தங்கும் கூடம், பல்நோக்கு அரங்கம், 3 உணவருந்தும் அறைகள். காத்திருப்பு அறைகள், கண்காட்சி அறை. மிக முக்கிய பிரமுகர்களின் முகாம் அலுவலகம். சந்திப்பு அறைகள், உடற்பயிற்சி மையம், வணிக மையம், நுாலகம் மற்றும் பல்வேறு வசதிகளுடன் இப்புதிய கட்டடம் கட்டப்படவுள்ளது.

இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (26.7.2024) டெல்லி, சாணக்யபுரியில் உள்ள வைகை தமிழ்நாடு இல்ல வளாகத்தில் 257 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டினார். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, தலைமைச் செயலாளர். சிவ் தாஸ் மீனா, பொதுப்பணித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மங்கத் ராம் சர்மா, பொதுத் துறை செயலாளர் ரீட்டா ஹரீஷ் தக்கர், பொதுத் துறை அரசு துணைச் செயலாளர் (மரபு) ஜெ.இ. பத்மஜா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tamil Nadu House New Building The Chief Minister laid the foundation stone

அதே சமயம் காணொலிக் காட்சி வாயிலாக டெல்லியிருந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர். பாலு, ஆ. ராசா, திருச்சி சிவா, தொல் திருமாவளவன், மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, சு. வெங்கடேசன், துரை வைகோ, வை. செல்வராஜ் டெல்லி தமிழ்நாடு இல்லத்தின் முதன்மை உள்ளுறை ஆணையர் ஆஷிஷ் சாட்டர்ஜி, கூடுதல் உள்ளுறை ஆணையாளர் ஆஷிஷ் குமார், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Delhi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe