Advertisment

முதல்வருக்கு நன்றி தெரிவித்த நெடுஞ்சாலை ஒப்பந்தக்காரர்கள் கூட்டமைப்பினர் 

tamil nadu highways contractor union thanks to cm stalin

தமிழ்நாடு நெடுஞ்சாலை ஒப்பந்தக்காரர்கள் கூட்டமைப்பின் மாவட்ட தலைவர்கள், மாநில செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டம் மாநில தலைவர் திரு.மு.திருசங்கு அவர்கள் தலைமையில் திருச்சியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநிலம் முழுவதிலுமிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட ஒப்பந்ததாரர்கள் கலந்து கொண்டார்கள்.

Advertisment

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப்பேசிய மாநில தலைவர் திரிசங்கு கூறுகையில், "நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தப் பணிகளில் உள்ள பழைய நிலுவைத்தொகையையும் மற்றும் புதிய பணிகளுக்கான தொகையை நிலுவை இல்லாமல் நிதியை வழங்கி வரும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ. வேலுவுக்கும் நன்றியைத்தெரிவித்துக் கொள்கிறோம்.

Advertisment

மத்திய அரசின் 47வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் 12% சதவீதத்திலிருந்து 18% சதவீதமாக உயர்த்திய நிலையில் கூடுதலான 6% சதவீதத்தை பழைய பணிகளுக்கும் சுமார் 258 கோடியை தமிழக அரசே தருவதற்கு அரசாணை பிறப்பித்ததமிழ்நாடு முதல்வருக்கும், பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சருக்கும் நன்றியைத்தெரிவித்துக் கொள்கிறோம். புலம் பெயர் தொழிலாளர்கள் அனைவருக்கும் தகுந்த பாதுகாப்பு கொடுத்து சாலை மற்றும் மேம்பாலப் பணிகளை வேகமாக முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு ஒப்படைக்க உறுதுணையாக இருக்கும். தமிழ்நாடு முதல்வருக்கும்,பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்" என்று தெரிவித்தார். மேலும் இது தொடர்பான 5அம்ச தீர்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

highways trichy
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe