Published on 28/01/2022 | Edited on 28/01/2022

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள கோட்ட பொறியாளர் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு துறை அலுவலகம் முன் சாலைப் பணியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த தர்ணா போராட்டத்தின் வாயிலாக சாலைப் பணியாளர்களின் ஒட்டுமொத்த முதுநிலை பட்டியல் தமிழ்நாடு சார்நிலைப்பணி அமைப்பு விதிகள் 35- 35a அடிப்படையில் வெளியிடவேண்டும். ஆய்வாளர் நிலை 2 பதவி உயர்வு அலுவலக உதவியாளர் இரவு காவலர் பணி மாற்றம் தகுதி வாய்ந்தவர்களுக்கு வழங்க வேண்டும். அரசாணை எண் 133 நாள் (13.10.2021)இன் படி சாலைப் பணியாளர்களுக்கு வேலை நிறுத்த நாட்களை முறைப்படுத்தி ஊதியப்பலன் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.