
தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் ஒரே கட்டமாக கடந்த 6ஆம் தேதி வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் வாக்கு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, 'ஸ்ட்ராங் ரூம்' எனப்படும் கட்டுப்பாட்டு அறையில் வைக்கப்பட்டு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கைக்காக தமிழகம் காத்திருக்கும் நிலையில், மத்திய அரசின் அழைப்பை ஏற்று தமிழக உயர் அதிகாரிகள் டெல்லி சென்றுள்ளனர்.
தமிழக டிஜிபி, தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், உள்துறைச் செயலாளர் பிரபாகர் உள்ளிட்ட தமிழக அரசின்நான்கு உயரதிகாரிகள் டெல்லி சென்றுள்ளனர். அதிகாரிகள் பதவி உயர்வுதொடர்பாக, மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)