Advertisment

தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்

jhh

2019 டிசம்பரில் தொடங்கிய கரோனா வைரஸ் பரவல், இன்றும் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இரண்டாம் அலையாக, உருமாறிய கரோனா வைரஸ் பரவி வரும் சூழலில் பல நாடுகள், முழு ஊரடங்கை அமல்படுத்திக்கொண்டிருக்கின்றன.

Advertisment

இந்நிலையில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரமாக நடைபெறுகின்றன. அந்தவகையில் சீரம் இன்ஸ்டிட்யூட் தயாரித்துள்ள ‘கோவிஷீல்ட்’ தடுப்பு மருந்துக்கும், பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள ‘கோவேக்சின்’ தடுப்பு மருந்துக்கும் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில், ஜனவரி 16 முதல் நாடு முழுவதும் தடுப்பு மருந்து செலுத்தப்படும் என்றும் உத்தரவிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் நேற்று முதற்கட்டமாக 166 மையங்களில் சுகாதாரப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதற்கிடையே தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.

Advertisment

Radhakrishnan
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe