தமிழகத்தில் நடைபெற இருக்கின்ற சட்டமன்றத்தேர்தலை ஒட்டி தமிழக அரசியல் கட்சிகள் பிரச்சாரம்,கூட்டணி பேச்சுவார்த்தை ஆகிய பணிகளில் தீவிரமாக இயங்கி வருகிறது. திமுகசார்பிலும் பிரச்சாரக்கூட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று (12.02.2021) திருப்பூரில் தூத்துக்குடி எம்.பி. கனிமொழி பேசுகையில், ''தமிழகத்தில் எங்கேயும் ஆரம்பசுகாதாரநிலையங்கள் செயல்படவில்லை. ரேஷன் கடைகள்நியாயவிலைக்கடைகளாக நடக்க வேண்டும். ஆனால் அவை நியாயமாக நடப்பதைப் போல் தெரியவில்லை. வெற்றி நடை போடும் தமிழகம் என விளம்பரத்தில் கூறிவிட்டுமுதல்வர்தான் நடக்கிறார். தமிழகம் வெற்றிநடை போடவில்லை'' என்றார்.