Advertisment

"தமிழ்நாட்டில் இதுவரை ஒமிக்ரான் கரோனா பாதிப்பு இல்லை" - அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டி!

publive-image

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், "தமிழ்நாட்டில் இதுவரை யாருக்கும் ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்படவில்லை. வெளிநாடுகளிலிருந்து நேற்று (01.12.2021) வந்த விமானப் பயணிகள் 477 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் ஒமிக்ரான் கண்டறியப்படவில்லை. விமானப் பயணிகளிடம் கரோனா கண்டறியப்பட்டால் மருத்துவமனையில் தனிவார்டில் அனுமதித்து சிகிச்சை தரப்படும். மரபணு சோதனையை மேற்கொள்ளும் ஆய்வகம் தமிழ்நாட்டிலேயே உள்ளது.

Advertisment

ஆர்டிபிசிஆர் பரிசோதனையிலேயே ஒமிக்ரான் பாதிப்பைக் கண்டறிய முடியும். மாஸ்க் மற்றும் தடுப்பூசிபோட்டால் ஊரடங்கு போடவேண்டிய நிலை ஏற்படாது. தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் மதுரை மாவட்டம் மோசமான நிலையில் உள்ளது. தடுப்பூசியின் முதல் டோஸை 71% பேர் எடுத்துக்கொண்ட நிலையில், இரண்டாவது டோஸை 32% பேர் மட்டுமே செலுத்தியுள்ளனர். மதுரை மக்கள் தயவுகூர்ந்து கரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும்." இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

Advertisment

pressmeet Health Minister Tamilnadu ma.subramanian
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe