Skip to main content

‘பெண் ஊழியர்களுக்கு மனச் சித்ரவதைகள்’ - கிராம வங்கி மண்டல மேலாளர் மீது குற்றச்சாட்டு!   

Published on 17/02/2023 | Edited on 17/02/2023

 

Tamil Nadu Grama Bank Zonal Manager Misbehaved With Female Employees
கந்தசாமி

 

“பெண்கள் எவ்வளவு முன்னேறி இருக்கிறார்களோ; அதை வைத்தே ஒரு சமூகம் எவ்வளவு முன்னேறி இருக்கிறது என்பதை நான் அளவிடுவேன் என்றார் அம்பேத்கர். தமிழ்நாடு கிராம வங்கியோ, பெண் பணியாளர்களை அவமரியாதையாக நடத்துகிறது. வங்கியில் பணிபுரியும் பெண்கள் துன்புறுத்தப்படுகிறார்கள்; மிரட்டப்படுகிறார்கள்; வீட்டுக்குச் சென்றால் தூங்க முடிவதில்லை. மனச் சித்ரவதைகள் மூலம் எங்களைப் போன்ற பெண் ஊழியர்களைப் பைத்தியமாக்கி விடுவார்களோ என்று அச்சமாக இருக்கிறது.” - தமிழ்நாடு கிராம வங்கியின் தலைவருக்கும், மாநில மகளிர் ஆணையத்துக்கும், மாநில மனித உரிமை ஆணையத்துக்கும் விருதுநகர்  மண்டல மேலாளர் கந்தசாமி குறித்து பெண் ஊழியர்கள் இருவர் எழுதிய  புகாரில் இடம்பெற்ற வாசகங்கள் இவை.    

 

பெண் ஊழியர் விரோத நடவடிக்கையை விருதுநகர் மண்டல மேலாளர் கந்தசாமி தொடர்ந்து கடைப்பிடித்து வருவதாகத் தமிழ்நாடு கிராம வங்கி ஒர்க்கர்ஸ் யூனியனும், தமிழ்நாடு கிராம வங்கி ஆபீஸர்ஸ் யூனியனும் அந்த வங்கியின் தலைவருக்கு புகார்கள் அனுப்பி, நடவடிக்கை எடுக்காத  நிலையில், தமிழ்நாடு கிராம வங்கியின் விருதுநகர் மண்டல அலுவலகம்  முன்பாக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர், சிஐடியூவின் உழைக்கும் மகளிர் குழுவினருடன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தோழர் பாலபாரதியும் பங்கேற்றுள்ளார்.

 

Tamil Nadu Grama Bank Zonal Manager Misbehaved With Female Employees

 

மண்டல மேலாளர் கந்தசாமி மீதான குற்றச்சாட்டுகள் சிலவற்றைப்  பார்ப்போம்:

 

பெண் ஊழியர் ஒருவர் மருத்துவ விடுப்பு கேட்டபோது “நாய்க்கு கூடத்தான்  உடம்பு சரியில்லாம இருக்கு. அதுவே சரியாகுறது இல்லையா? உங்களுக்கு  என்னம்மா?” என்று கமென்ட் அடித்தார். “பெண் ஊழியர்கள்கிட்ட ஆக்கத்திறன் (productivity) இல்ல. அவங்களால வங்கிப் பணம் வீணாகுது. வங்கி நிர்வாகத்திடம் கிளைகளில் பெண் ஊழியர்களை வேலைக்குப் போடாதீங்கன்னு சொன்னாலும் அவங்களுக்கு புரியுறதில்ல.” எனப் புலம்புகிறார். பட்டியலினத்தைச் சேர்ந்த பெண் ஊழியர் ஒருவரை கிளை மேலாளருடன் சேர்ந்துகொண்டு மன உளைச்சலுக்கு ஆளாக்கியதால் அவருக்கு இரண்டு முறை அபார்ஷன் ஆனது. தங்களோடு பணிபுரிந்த ஒரு ஆண் மேலாளருக்கு இன்னொரு பெண் மேலாளர் பணி ஓய்வு விழா நடத்த முயன்றபோது ‘குறுநில மன்னர்களுக்கு பிரிவு விபச்சார விழா’ என்று கிண்டலடித்து சங்கத்தின் வாட்ஸ்-ஆப் குரூப்பில் மெசேஜ் அனுப்பினார். ஒரு குறுநில மன்னரைக் குஷிப்படுத்த அனேக வழிகள் இருக்கின்றன. அதைத் தனியாகக் கையாண்டிருக்கலாம் என்று அந்தக் குறுந் தகவலில் விழா நடத்திய பெண் மேலாளரைக் கொச்சைப்படுத்தினார்.

 

தன் மீதான குற்றச்சாட்டுக்கு மண்டல மேலாளர் கந்தசாமி அளித்த பதில்:

 

விருதுநகர் மண்டல மேலாளர் கந்தசாமியிடம் ‘குற்றச்சாட்டுகளைப் பட்டியலிட்டு சங்கத்தினர் போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்துமளவுக்கு பெண் ஊழியர்களைக் கொடுமைப் படுத்துகின்றீர்களா?’ எனக் கேட்டோம். “அந்த வாட்ஸ்-ஆப் மெசேஜ் விவகாரம் 2018ல நடந்தது. அந்தப் பழைய கதைய இப்ப உள்ளே இழுத்துவிடறாங்க. அப்ப நான் மண்டல மேலாளர் கிடையாது. கிளை மேலாளரா இருந்தேன். பணி ஓய்வு விழா நடத்துறோம்னு  சொல்லி கட்டாய வசூல் வேட்டை நடத்துனாங்க. உறுப்பினர்களை மிரட்டி பணம் வாங்கலாமா? அது கையூட்டு அல்லவா? அப்ப நானும் தொழிற்சங்கத்துல இருந்தேன். அதனால தவறைச் சுட்டிக்காட்டி மெசேஜ் போட்டேன். என்னோட மண்டலத்துல விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள் இருக்கு. 78 கிளைகள் இருக்கு. நிரந்தரப் பணியாளர்களா 320 பேர் வேலை பாக்குறாங்க. தினக்கூலிகள், அப்ரைசர்னு எல்லாரையும் சேர்த்து மொத்தம் 500 பேர் இருக்காங்க. இந்த மண்டலத்துல வேலை பார்க்கிற 500 பேர்ல என்னை எதிர்க்கிறவங்க... மிஞ்சி மிஞ்சிப் போனா  அஞ்சு பேர்தான் இருப்பாங்க. அவங்க, அவங்க கடமையை ஒழுங்கா செய்யாதவங்க.

 

எத்தனை லட்சம் பேர் படிச்சிட்டு வேலை இல்லாம திரியிறாங்க. அப்படியே வேலை கிடைச்சாலும் நைட்டும் பகலுமா வேலை வாங்கிட்டு எட்டாயிரமோ பத்தாயிரமோதான் சம்பளம் தர்றாங்க. ஆனா.. வங்கியில் வேலைக்குச் சேரும்போதே 50 ஆயிரம் ரூபாய் சம்பளம் கிடைச்சிருது.  இவ்வளவு சம்பளம் வாங்குறவங்க பொறுப்பை உணர்ந்து வேலை செய்யணும்ல? இது கிராம வங்கி. இங்கே வர்றவங்க சாதாரண ஏழை எளிய மக்கள். இந்த மக்கள்கிட்ட கொஞ்சம் இறங்கி கனிவா நடந்துக்கலாம்ல. 3 மணிக்கு மேல வந்தா அதைச் செய்யமாட்டேன், இதைச் செய்யமாட்டேன்னு சொல்லலாமா? இந்த மாதிரி பண்ணாதீங்கன்னு எடுத்துச் சொல்லுறோம். இந்த மண்டலத்துல எல்லாரும் நல்லாத்தான் வேலை பார்க்கிறாங்க. ஒரு நாலஞ்சு பேரைத் தவிர. பணியில் தவறு நடந்தால் நான் கண்டிப்பு காட்டுவேன். எங்கெங்கே ஒழுக்கக்கேடு நடக்குதுன்னு பார்க்க வேண்டியது  ஒரு மண்டல மேலாளரோட பணி. அதைத்தான் பண்ணிட்டு இருக்கேன்.  இதுதான் சிலருக்கு இடைஞ்சலா இருக்கு. எனக்கெதிரான புகார்கள், இந்த  ஆர்ப்பாட்டம் எல்லாமே பாலிடிக்ஸ்.” என்று விரிவாக விளக்கம் அளித்தார். 

 

தமிழ்நாடு கிராம வங்கியின் தலைவர் செல்வராஜை தொடர்புகொண்டோம். “ஆமா... ரெண்டு ஸ்டாஃப்கிட்ட இருந்து கம்ப்ளைண்ட் வந்திருக்கு. கம்ப்ளைண்ட விசாரிப்போம். என்ன நடவடிக்கை எடுக்கணுமோ எடுப்போம். இது வழக்கமான வங்கி நடைமுறைதான். இதுக்கெல்லாம் ரூல்ஸ் இருக்கு.”  என்று சிம்ப்பிளாக முடித்துக்கொண்டார். உரிய முறையில் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது தமிழ்நாடு கிராம வங்கி ஊழியர்களின் பொதுவான எதிர்பார்ப்பாக உள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காதலிக்கு சரமாரி கத்திகுத்து; காதலன் வெறிச்செயல்!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
 lover stabbed his girlfriend who forced her to marry him

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வசித்து வருபவர் ஆதித்யா சிங்(27). தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்துவரும் இவர்' அதே பகுதியில் உள்ள உடற்பயிற்சி கூடத்திற்கு செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அப்போது உடற்பயிற்சி கூடத்திற்கு இளம் பெண் ஒருவரும் வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து ஆதித்யா சிங்கிற்கும் அந்தப் பெண்ணிற்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில், இந்தப் பழக்கம் காதலாக மாறியுள்ளது. இதனைத் தொடர்ந்து இருவரும் அதே பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஆதித்யா சிங் அந்தப் பெண்ணுடன் அடிக்கடி தனிமையில் இருந்துள்ளார். இதனைத் தொடர்ந்து அந்தப் பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ஆதித்யா சிங்கை தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். இதனை ஆதித்சிங் மறுத்துள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் சம்பவத்தன்று மறுபடியும் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அந்தப் பெண் ஆதித்யா சிங்கிடம் கேட்டுள்ளார். ஆனால் அவர் வழக்கம் போல மறுத்துள்ளார். அப்போது இருவருக்கும் வாக்கு வாதம் முற்றிய நிலையில் ஒரு கட்டத்தில் அந்தப் பெண்ணை ஆதித்யா சிங், கத்தியால் சரமாரியாக குத்தி உள்ளார். பின்பு அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளார்.

அப்போது, அந்தப் பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு உள்ளே வந்து பார்த்த அக்கம் பக்கத்தினர் போலீசருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்தப் பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அப்போது அவரிடம் நடத்திய விசாரணையில்  காதலிப்பதாக கூறி  ஏமாற்றியது தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள ஆதித்யா சிங்கை தேடி வருகின்றனர்.

Next Story

டிக்கெட் பரிசோதகர் கையைக் கடித்த பெண்; ஓடும் ரயிலில் பரபரப்பு!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Woman bites ticket inspector hand in moving train

ரயிலில் டிக்கெட் பரிசோதகரைக் கடித்த இளம்பெண்ணின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையில் இருந்து நேற்று முன் தினம் விரார் நோக்கி மின்சார ரயில் ஒன்று சென்றுக்கொண்டிருந்தது. அந்த ரயில் தகிசர் - மிரோரோடு இடையே சென்றுக்கொண்டிருந்தபோது, அதிரா(26)  என்ற பெண் டிக்கெட் பரிசோதகர் பயணிகளிடம் டிக்கெட் பரிசோதனையில் ஈடுபட்டிருந்தார்.

இந்த நிலையில், ரயில் பெட்டியில் இருந்த சிங் என்ற பெண்ணிடம் டிக்கெட் பரிசோதனை செய்வதற்காக டிக்கெட் கேட்டுள்ளார். அதற்கு அந்த பெண், தனது கணவர் வாட்ஸ் ஆப்பில் அனுப்பிய டிக்கெட்டை காட்டியுள்ளார். ஆனால், இந்த டிக்கெட் செல்லாது என்று கூறிய பரிசோதகர் அதிரா, அடுத்து வரும் மிரா ரோடு ரயில் நிலையத்தில் இறங்குமாறு கூறியுள்ளார். இதனால்  இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த பெண் பயணி மிராரோடு ரயில் நிலையம் வந்ததும், டிக்கெட் பரிசோதகர் அதிராவின் கையை கடித்துவிட்டு தப்பிக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அதிரா கத்தி கூச்சலிட அக்கம்பக்கத்தில் இருந்த மற்ற பயணிகள் பெண் பயணியை பிடித்து ரயில்வே போலீஸிடம் ஒப்படைத்தனர். பாதிக்கப்பட்ட பரிசோதகருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ள நிலையில் பெண் பயணிமீது வழக்குப்பதிவு செய்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.