Tamil Nadu Governor Visit to Chidambaram Nataraja Temple: 2 Day Tour

Advertisment

சிதம்பரம் நாட்டியாஞ்சலி விழாவிற்கு வருகை தரும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பிப். 22, 23 தேதிகளில் நடராஜர் கோயில் விழா மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

சுற்றுப்பயண விவரம்: பிப். 22-ம் தேதி காலை 12.30 சென்னை ராஜ்பவனில் இருந்து புறப்பட்டு மதியம் 2.30 மணிக்கு புதுச்சேரி அக்கார்டு ஹோட்டல் வந்தடைகிறார். அங்கு மதிய உணவு மற்றும் ஓய்வு எடுத்த பிறகு 3 மணிக்கு புறப்பட்டு சிதம்பரம் அண்ணாமலைபல்கலைக்கழக விருந்தினர் விடுதிக்கு கார் மூலம் 4.30 மணிக்கு வந்தடைகிறார். பின்னர் மாலை 6.30 மணிக்கு சிதம்பரம் தெற்கு வீதியில் நடைபெற்று வரும் 42வது நாட்டியாஞ்சலி விழா நிறைவு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

விழா முடிவுற்று இரவு 8.40 மணிக்கு பல்கலைக்கழக விருந்தினர் விடுதிக்கு சென்று இரவு தங்குகிறார். மறுநாள் பிப். 23-ம் தேதி காலை 7 மணிக்கு சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார். பின்னர் பல்கலைக்கழக விருந்தினர் விடுதிக்கு சென்று ஓய்வு எடுத்த பின்னர் 9.30 மணிக்கு சிதம்பரம் ஓமக்குளத்தில் உள்ள நந்தனார் மடத்திற்கு சென்று சுவாமி சகஜானந்தா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.

Advertisment

பின்னர் கார் மூலம் புதுச்சேரி அக்கார்டு ஹோட்டலுக்கு சென்று சிறிது நேரம் ஓய்வெடுத்த பின்னர் காலை 11.50 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு கார் மூலம் சென்னை ராஜ்பவன் சென்றடைகிறார். ஆளுநர் வருகையை முன்னிட்டு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.ராஜாராம் மேற்பார்வையில் சிதம்பரம் ஏஎஸ்பி ரகுபதி தலைமையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.