சென்னை சேத்துப்பட்டில் உள்ள தனியார் பள்ளியில் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார்.
இந்த விழாவில் அவர் பேசியதாவது, “2047 ஆம் ஆண்டு இந்தியா முழுமையாக வல்லரவு பெற்று விளங்கும். பாடத்திட்டத்தை தாண்டி மாணவர்கள் யோசிக்க வேண்டும். தேசிய பாடத்திட்டத்துடன் ஒப்பிடும்போது நமது மாநில பாடத்திட்டம் மோசமாக உள்ளது. அதைப்பற்றி நான் பேச விரும்பவில்லை. மாநில பாடத்திட்டம் சிறப்பானதாக இல்லை. மிகவும் பின் தங்கி உள்ளது. நமது கல்லூரி மாணவர்களிடம் பேசும்போது அவர்களது அறிவுத்திறன் குறைவாக இருப்பது தெரிகிறது” எனப் பேசினார்.