Skip to main content

ஆளுநரின் சர்ச்சை பேச்சு; வலுக்கும் எதிர்ப்புகள்

Published on 23/02/2023 | Edited on 23/02/2023

 

tamil nadu governor ravi black flag in chidambaram

 

சிதம்பரம் நாட்டியாஞ்சலி அறக்கட்டளையின் சார்பில் 42 ஆம் ஆண்டு நாட்டியாஞ்சலி விழா தெற்கு ரத வீதியில் உள்ள ராஜா சர் அண்ணாமலை செட்டியார் வளாகத்தில்  கடந்த 18 ஆம் தேதி ஆரம்பித்த மகா சிவராத்திரியைத் தொடர்ந்து 5 நாட்கள் நடைபெற்று வந்த நிலையில் 22 ஆம் தேதியான நேற்று நிறைவு விழா நடைபெற்றது.

 

இவ்விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “நடராஜர் ஆதி கடவுள் என்பது அனைவரும் அறிந்தது. சனாதன தர்மத்தைப் பொறுத்தவரை மனித படைப்புகள் பஞ்ச பூதங்களுடன் இணைந்துள்ளது. அதில் நான்கு தமிழகத்தில் உள்ளது. தமிழ்நாடு ஆன்மீகத் தலைநகரம். சனாதனத்தின் மையப்புள்ளி தமிழகம் தான். கலாச்சாரம் என்பது வாழும் இடங்களைப் பொறுத்தது அல்ல. பாரத கலாச்சாரம் என்பது சனாதன தர்ம வேரிலிருந்து வந்தது. அரசியல் காரணங்களுக்காக அதைச் சொல்ல தயங்குகின்றோம். நமது நடனமும் இசையும் இயற்கையோடு ஆன்மீகத்தோடு ஒன்றியுள்ளது. அதனைத் தவற விட்டு விடக்கூடாது. நமது கலாச்சாரத்தில் நாத்திகர்களும் உள்ளனர். அவர்களைத் தள்ளி வைக்க முடியாது. அவர்களும் ஒன்றிணைந்தது தான் பாரதம். பொருளாதாரத்தில் வேகமாக வளரும் நாடுகளில் இந்தியா உள்ளது" எனத் தனது உரையை  முடித்தார்.

 

அதனைத் தொடர்ந்து சிதம்பரம், சென்னை, பெங்களூர், மும்பை, கடலூர் உள்ளிட்ட ஊர்களில் இருந்து ஏராளமான நாட்டியக் கலைஞர்கள் கலந்து கொண்டு பரதம், குச்சிப்புடி, உள்ளிட்ட நடனங்களை ஆடி நடராஜ பெருமானுக்கு சமர்ப்பணம் செய்தனர். இந்த நாட்டிய விழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு நாட்டியத்தைப் பார்த்து ரசித்தனர்.

 

அண்மையில் 'கார்ல் மார்க்ஸின் சிந்தனை தான் ஒரு காலத்தில் இந்தியாவை சிதைத்தது' என தமிழக ஆளுநர் ரவி பேசியது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் சிதம்பரம் வந்துள்ள ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி காட்ட இருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்  ஏற்கனவே தெரிவித்து இருந்தனர்.

 

tamil nadu governor ravi black flag in chidambaram

 

இந்நிலையில், சிதம்பரம் நடராஜர் கோவிலில் இன்று காலை சாமி தரிசனம் செய்ய வந்த ஆர்.என்.ரவியைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தெற்கு வீதியில் 30க்கும் மேற்பட்டவர்கள் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு மறியல் போராட்டம் செய்தனர். மேலும், ஆளுநருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இதனைத் தொடர்ந்து கருப்புக்கொடி காட்டியவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

மைசூர் விரைவு ரயில் கடலூர் வரை நீட்டிப்பு; கடலூர், சிதம்பரம் பகுதி மக்கள் மகிழ்ச்சி

Published on 17/07/2024 | Edited on 17/07/2024
people are happy as the Mysore Express has been extended to Cuddalore

கடலூர் மாவட்டத்தில் கடலூர் தொழிற்சாலைகள் நிறைந்த நகரமாகவும், சிதம்பரம் நகரம் அண்ணாமலை பல்கலைக்கழகம்,  நடராஜர் கோவில், பிச்சாவரம் சுற்றுலா மையம் எனச் சிதம்பரம் சுற்றுலா மற்றும் ஆன்மீக நகரமாக இருந்து வருகிறது. 

இந்த நிலையில் கடலூர் மற்றும் சிதம்பரம் வழியாகக் கோயம்புத்தூர், கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்கு போதிய ரயில் வசதி இல்லாததால் பொதுமக்கள் வணிகர்கள், அரசு, தனியார் துறைகளில் பணியாற்றுபவர்கள், மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் மயிலாடுதுறை மைசூர் விரைவு ரயில், மயிலாடுதுறை கோவை ஜென் சகாப்தி விரைவு ரயில்களை கடலூர் துறைமுகம் வரை நீட்டிக்க வேண்டும். அதேபோல் அயோத்தி - ராமேஸ்வரம் சாரதா சேது விரைவு வண்டி, தாம்பரம்-செங்கோட்டை, சென்னை எழும்பூர்-காரைக்கால் ஆகிய 3 ரயில்களும் சிதம்பரம் ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் மற்றும் சிதம்பரம் பகுதியில் உள்ள வர்த்தக சங்கத்தினர், பொதுமக்கள், ரயில் பயணிகள் சங்கத்தினர், சிபிஎம், திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி,  உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள்  மற்றும் சமூக அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். 

இதற்கு ரயில்வே நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் உண்ணாவிரதம், ரயில் மறியல், கோரிக்கை முழக்கப் போராட்டம் என முன்னெடுத்தனர். இதனைத் தொடர்ந்து சிதம்பரம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் சார் ஆட்சியர் ராஷ்மிராணி தலைமையில் இது குறித்து 2 கட்ட அமைதி பேச்சுவார்த்தைக் கூட்டம் நடைபெற்றது. இதில் ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்தது. இதனைத் தொடர்ந்து மார்ச் மாதம் 7-ஆம் தேதி ஜென்சதாப்தி, மைசூர் ரயிலைக் கடலூர் துறைமுகம் வரை நீட்டிக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலால் ரயிலை இயக்குவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. பின்னர் அறிவித்த ரயிலை உடனே இயக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, வர்த்தக சங்கத்தினர் சார் ஆட்சியரைச் சந்தித்து ஜூன் மாதம் கடிதம் அளித்தனர்.

இதனையொட்டி நீண்ட கால பொதுமக்களின் கோரிக்கையை ஏற்றுத் தென்னக ரயில்வே முதல் கட்டமாக மயிலாடுதுறை - மைசூர் 16231/ 16232 விரைவு ரயில் கடலூர் துறைமுகம் வரை ஜூலை 19 ஆம் தேதியில் இருந்து இயக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனையறிந்த சிதம்பரம், கடலூர் பகுதியில் உள்ள பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதே நேரத்தில் கடலூர் துறைமுகத்தில் ரயில் பெட்டிகளுக்குத் தண்ணீர் நிரப்பும் வசதி, ரயில் ஓட்டுநர் மற்றும் பாதுகாவலர் ஆகியவர்கள் தங்கும் அறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகள் கடலூர் துறைமுகம் ரயில் நிலையத்தில் நடைபெற்று முடியும் தறுவாயில் உள்ளது.

இதுகுறித்து ரயில்வே உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில் மயிலாடுதுறைக்குக் காலை 7 மணிக்கு மைசூர் ரயில் வரும் 7.05 கடலூர் துறைமுகத்திற்கு புறப்பட்டுச் செல்லும் முதல் நாள் பரிசோதனை அடிப்படையில் இயக்கப்படும் அடுத்த நாள் தான் நேரம் அறிவிக்கப்படும் எனக் கூறினார்.

Next Story

ஆளுநருடன் மத்திய அமைச்சர் அமித்ஷா ஆலோசனை!

Published on 17/07/2024 | Edited on 17/07/2024
Union Minister Amit Shah consultation with the Governor

பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக ஆளுநர் ஆர். என். ரவி  5 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். இந்த பயணத்தின் ஒரு பகுதியாக ஆளுநர் ஆர். என். ரவி நேற்று (16.07.2024) பிரதமர் மோடி, நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு ஆகியோரை சந்தித்து பேசியிருந்தார். இதனைத் தொடர்ந்து இன்று (17.07.2024) ஆளுநர் ஆர். என். ரவி மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்து பேசியிருந்தார்.

இந்நிலையில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானைத் தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் ஆளுநர் ஆர். என். ரவி சந்தித்து பேசியுள்ளார். மத்திய அமைச்சர் அமித்ஷாவை ஆளுநர் ஆர். என். ரவி சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Union Minister Amit Shah consultation with the Governor

இது தொடர்பாக ஆளுநர் மாளிகையின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் ஆளுநர் வெளியிடப்பட்டுள்ள பதிவில், “மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் தமிழ்நாட்டில் நிலவும் பாதுகாப்பு, அது தொடர்புடைய சூழ்நிலைகள்,  மாநில மக்களின் அமைதி, முன்னேற்றம் மற்றும் பாதுகாப்பில் அவை ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்து மிகவும் ஆக்கபூர்வ  சந்திப்பை மேற்கொண்டேன்.  நமது மக்களை பாதிக்கும் பிரச்சனைகள் மீது அற்புதமான ஆழ்ந்த பார்வையும் அவர்களின் நல்வாழ்வில் மிகுந்த அக்கறையும் அவருக்கு உள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக அரசியல் கட்சித் தலைவர்களின் கொலை சம்பவங்கள் தொடர்பாக எதிர்க்கட்சியினர் பலரும் தமிழகத்தின் சட்ட ஒழுங்கு குறித்து கேள்விகளை எழுப்பி வரும் சூழலில் மத்திய அமைச்சர் அமித்ஷாவை ஆளுநர் ஆர். என். ரவி சந்தித்து பேசியுள்ள சம்பவம் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் பார்க்கப்படுகிறது.