Published on 29/12/2021 | Edited on 29/12/2021

சென்னை பட்டினம்பாக்கத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "தமிழ்நாட்டு மக்களுக்கு தேவையான நலத்திட்டங்கள் பெரும்பாலானவை அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்டவை. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது தமிழ்நாடு அரசு பழிவாங்கும் நடவடிக்கை மேற்கொள்கிறது. டாஸ்மாக் மூடப்படும் என்பது தி.மு.க.வின் வாக்குறுதி; ஆனால், ஆட்சிக்கு வந்த பின் டாஸ்மாக் இயங்கும் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க.வின் இமேஜை அழிக்க தமிழ்நாடு அரசு முயற்சி செய்கிறது; கால சக்கரம் சுழலும், தி.மு.க. பதில் சொல்ல வேண்டிய நிலை வரும். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படுவது சந்தேகமே" என்றார்.