ADVERTISEMENT

"தமிழக அரசு இம்மாதிரியான நிர்ப்பந்தங்களுக்குப் பணியக் கூடாது"- ஜோதிமணி எம்.பி.!

09:10 AM Oct 31, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தீபாவளி அன்று தமிழ்நாட்டில் அனைத்து பகுதிகளிலும் இறைச்சிக் கடைகளைத் திறக்க தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. முன்னதாக, தீபாவளி அன்று மகாவீர் ஜெயந்தி கடைப்பிடிக்கப்பட உள்ள நிலையில், சென்னை பெருநகர மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நவம்பர் 4- ஆம் தேதி இறைச்சிக் கடைகளை மூட உத்தரவிட்டிருந்த நிலையில், பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பில் இருந்து வந்த கோரிக்கையை அடுத்து, தமிழ்நாடு அரசு இறைச்சி கடைகளைத் திறக்க அனுமதி அளித்துள்ளது.

இது குறித்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கரூர் தொகுதியின் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "சைவத்தைப் போல அசைவமும் ஒரு உணவுமுறை கோவில்களில் கிடாய்வெட்டிப் பொங்கல் வைக்கும் மரபு நம்முடையது. அப்படியிருக்கும்போது ஒரு குறிப்பிட்ட மதத்தினர் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் இறைச்சி கடைகள் மூடப்படும் என்று தமிழக அரசு சொல்வது ஒரு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிடும்.

பெரும்பான்மை வாதம் ஆபத்தானது. பெரும்பான்மையோர் அசைவம் சாப்பிடுவதால், சைவம் சாப்பிடுபவர்களது பழக்கத்தை கேள்விக்குள்ளாக்க முடியாது. அப்படிசெய்யவும் கூடாது. அதேபோல் தான் இதுவும். ஒவ்வொருடைய தனிப்பட்ட நம்பிக்கைகளும் வீட்டிற்குள் தான் இருக்க வேண்டும். பொதுவெளியில் அல்ல.

நமது மண்ணில் நமது மரபும்,நமது கலாச்சாரமும்,வாழ்வியலும் போற்றிப் பாதுகாக்கப்படவேண்டும். தமிழக அரசு இம்மாதிரியான நிர்ப்பந்தங்களுக்குப் பணியக் கூடாது.

தமிழக மண்ணில் இதுபோன்ற உணவுத் தூய்மைவாத ஆர்எஸ்எஸ் சிந்தனைகளை ஊக்குவிக்கக்கூடாது. அது நீண்டகால நோக்கில் நமது மண்ணிற்கும், மரபிற்கும், எதிர்காலத்திற்கும் மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும்" என்று குறிப்பிட்டுள்ளார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT