வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்ற பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடாத தமிழக அரசை கண்டித்து இன்று (21.03.2023) தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர், தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் ஒரு பகுதியாக சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாநிலத் தலைவர் மு.அன்பரசு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.