Skip to main content

ஆர்.எஸ்.எஸ். பதிவு செய்யப்பட்ட அமைப்பா? - தமிழக அரசு சரமாரி கேள்வி

Published on 16/10/2023 | Edited on 16/10/2023

 

Tamil Nadu government  questioned RSS A registered organization?

 

விஜயதசமியை முன்னிட்டு தமிழ்நாட்டில் மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை உள்படத் தென்மாவட்டங்களில் உள்ள பல்வேறு இடங்களில் பேரணி நடத்துவதற்கு ஆர்.எஸ்.எஸ் அமைப்பு அந்தந்த மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர்களிடம் அனுமதி கோரி மனு அளித்தது. ஆனால், அந்த மனு குறித்து காவல்துறை சார்பில் எந்தவித பதிலும் தராததால் கடந்த 13 ஆம் தேதி  ஆர்.எஸ்.எஸ்.சார்பில் மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று அளித்தது. 

 

அவர்கள் அளித்த அந்த மனுவில், ‘இந்தியாவின் 75வது சுதந்திர தினம், அம்பேத்கர் பிறந்த நூற்றாண்டு மற்றும் விஜயதசமியை முன்னிட்டு அக்டோபர் 22 மற்றும் 29 ஆகிய தேதிகளில் ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரி காவல்துறையினரிடம் மனு அளித்தோம். தமிழகத்தில் பல அரசியல் கட்சிகளுக்கு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதிக்கப்படுகிறது. ஆனால், மதுரை உள்படத் தென் மாவட்டங்களில் உள்ள 20 இடங்களில் ஊர்வலம் நடத்த அனுமதி மறுப்பது என்பது அடிப்படை உரிமையை மீறும் செயலாகும். எனவே, ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்த காவல்துறையினருக்கு உத்தரவிட வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தது. அந்த மனுவை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள், இந்த மனுவுக்குத் தமிழக அரசு பதில் அளிக்குமாறு இந்த வழக்கை அக்டோபர் 16 ஆம் தேதி ஒத்திவைப்பதாக உத்தரவிட்டனர். 

 

இந்த நிலையில், இந்த மனு மீதான விசாரணை இன்று நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் பதில் அளிக்கையில், “ஆர்.எஸ்.எஸ் சங்க அமைப்பா? அறக்கட்டளையா? அல்லது தேர்தல் ஆணையம் அங்கீகரித்த அரசியல் கட்சியா? என்று எந்தவித தகவலும் இல்லை. மேலும், இந்தப் பேரணியில், கலந்து கொள்பவர்கள் யார் யார்? எத்தனை பேர் இருப்பார்கள்? இந்த பேரணி எங்கு தொடங்கி எங்கு முடியும்? என்று எந்த விபரமும் அளிக்காமல் அனுமதி கேட்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ். நடத்தும் பேரணியில் ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் அதற்கு யார் பொறுப்பேற்பது? அதுமட்டுமல்லாமல், தென் மாவட்டங்களில் தேவர் குருபூஜை உள்ளதால் ஆர்.எஸ்.எஸ்.பேரணிக்குப் பாதுகாப்பு வழங்குவது என்பது மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தக் கூடிய ஒன்றாகும்” என்று கூறினர்.

 

இருதரப்பு வாதங்களைக் கேட்ட மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள், “தமிழக அரசு விதிக்கும் நிபந்தனைக்களுக்குக் கட்டுப்படுவதாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். மேலும், அந்த பிராமணப் பத்திரத்தில் பேரணி குறித்த முழு விபரங்களைத் தாக்கல் செய்ய வேண்டும்” என்று ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

நிலங்களை கையகப்படுத்தும் அரசு; எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம்

Published on 22/07/2024 | Edited on 22/07/2024
Opposition to government acquisition of agricultural lands

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள இறைஞ்சி கிராமத்தில் சுமார் 1500 ஏக்கர் பரப்பளவில் அரசு தொழிற்பேட்டை அமைப்பதற்காக விளை நிலங்களை அரசு கையகப்படுத்த அதிகாரிகள்  பார்வையிட்டு சென்றுள்ளனர். ஏற்கனவே இங்கே தொழில்பேட்டை உள்ள நிலையில் புதிய தொழில்பேட்டை அமைக்க இறைஞ்சி, ஆசனூர், கூந்தலூர், காச்சகுடி, குருபிடபுரம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களை பார்வையிட்டு சென்றனர்.

இதனை அறிந்த இறைஞ்சி, ஆசனூர், கூந்தலூர், காச்சகுடி, குருபிடபுரம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் விளை நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து விளை நிலங்களில் நின்று பெண்கள் மார்பில் அடித்துக் கொண்டு அழுது போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்பொழுது தாங்கள் இந்த விளை நிலங்களில் கரும்பு, தென்னை, பருத்தி மரவள்ளி, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை பயிர் செய்து பிழைப்பு நடத்தி வருவதாகவும், இந்த நிலங்களை கையகப்படுத்தினால் எங்கள் வாழ்வாதாரம் முற்றிலும் அழிந்து விடும் எனவும் நிலங்களை கையகப்படுத்தும் எண்ணத்தை கைவிட வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து வந்த எடைக்கல் போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அதிகாரிகளும் தெரிவிப்பதாக கூறியதை அடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Next Story

பிரதமர் மோடியை மறைமுகமாகத் தாக்கிப் பேசிய ஆர்எஸ்எஸ் தலைவர்!

Published on 19/07/2024 | Edited on 19/07/2024
RSS leader who indirectly attacked PM Modi!

சமீபத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடி, தனியார் ஊடகத்துக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் பேசியதாவது, “நான் பயலாஜிகலாக பிறக்கவில்லை என்று நம்புகிறேன். என் தாயார் உயிரோடு இருக்கும்வரை, இந்த உலகிற்கு என் தாய் மூலம்தான் வந்தேன் என நம்பிக்கொண்டிருந்தேன். ஆனால், என் தாயாரின் மரணத்திற்கு பிறகு, நான் பலவற்றை சிந்தித்துப் பார்த்தேன். இப்போது நான் அதை ஏற்றுக்கொள்ளவும் செய்கிறேன். சிலர் இதற்கு எதிராக பேசலாம். ஆனால், நான் இதை முழுமனதாக நம்புகிறேன். என்னை இந்த உலகிற்கு அனுப்பியது பரமாத்மாதான். பயாலஜிக்கலாக நான் பிறந்திருக்க வாய்ப்பில்லை. நான் மனிதப்பிறவி அல்ல. ஏதோவொரு விஷயத்தை நடத்தியே ஆக வேண்டும் என்பதற்காக, கடவுள் என்னை இந்தப் பூமிக்கு அனுப்பியிருக்கிறார்” என்று தெரிவித்தார். அவரது பேச்சு, மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இது குறித்து பிரதமர் மோடியை, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, உள்பட அனைத்து எதிர்க்கட்சியினரும் கடுமையாக விமர்சனம் செய்து வந்தனர். 

இந்த நிலையில், பிரதமர் மோடியின் அந்த கருத்தை, ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் மறைமுகமாக விமர்சனம் செய்துள்ளார். ஜார்க்கண்ட் மாநிலம், கும்லா பகுதியில் கிராம அளவிலான தன்னார்வலர் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “முன்னேற்றத்திற்கு எப்போதாவது ஒரு முடிவு உண்டா? நாம் நமது இலக்கை அடையும்போது, ​​இன்னும் செல்ல வேண்டியவை அதிகம் இருப்பதைக் காண்கிறோம். ஒரு மனிதன் சூப்பர்மேன் ஆக விரும்புகிறார். திரைப்படங்களில் அவர்கள் அசாதாரண சக்திகளைக் கொண்ட சூப்பர்மேனைக் காட்டுகிறார்கள். எனவே ஒரு மனிதன் அத்தகைய சக்தியைப் பெற விரும்புகிறான். 

ஆனால், அவன் அதோடு மட்டும் நிற்கவில்லை. அதன்பிறகு தேவனாக விரும்புகிறான். ஆனால் தேவதாஸ்  நம்மை விட கடவுள் பெரியவர் என்று கூறுகிறார்கள். எனவே மனிதர்கள் கடவுளாக மாற விரும்புவதாக கூறுகிறார்கள். ஆனால், பகவான் தன்னை ஒரு விஸ்வரூபம் என்கிறார். அதைவிடப் பெரியது எதுவும் இருக்கிறதா என்பது தெரியவில்லை. 

வளர்ச்சிக்கு முடிவே இல்லை. எப்பொழுதும் அதிகமானவற்றிற்கு வாய்ப்பு இருப்பதாக ஒருவர் நினைக்க வேண்டும். தொழிலாளர்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டும். எப்போதும் அதிகமாக பாடுபட வேண்டும். நிறைய வேலைகள் செய்ய வேண்டும். பல குழந்தைகளுக்கு நாம் கற்றுக் கொடுத்தாலும், கல்வி தேவைப்படும் என்ற புதிய தலைமுறை உருவாகி வருகிறது. வளர்ச்சி என்பது ஒரு தொடர் பணி. ஒரு தொழிலாளிக்கு நாம் இவ்வளவு செய்தோம், ஆனால் இன்னும் நிறைய இருக்கிறது என்ற உணர்வு இருக்க வேண்டும்.