Tamil Nadu government offers house to writer Devi Bharathi

தமிழக அரசு படைப்பாளிகளை ஊக்குவிக்கும் வகையில், திமுக அரசு அமைந்தவுடன் முதல்வர் ஸ்டாலின் சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர்களுக்கு வீடு வழங்கப்படும் என்று அறிவித்தார். அதனைத் தொடர்ந்து ‘கலைஞர் இல்லம்’ என்ற பெயரில் சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர்களுக்கு தமிழக அரசு வீடு வழங்கி வருகிறது.

Tamil Nadu government offers house to writer Devi Bharathi

Advertisment

அந்த வகையில் 2003 ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் தேவி பாரதி என்கிற ராஜசேகருக்கு தமிழக அரசு சார்பாக சென்னை செனாய் நகரில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் ஒரு வீடு வழங்கப்பட்டுள்ளது. அதன் பத்திரப்பதிவு நேற்று(30.5.2005) நொளம்பூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் நடைபெற்றது. அதன்பிறகு தமிழ் வளர்ச்சித் துறையின் இயக்குநர் அவ்வை அருள் வீட்டின் சாவி எழுத்தாளர் தேவி பாரதியிடம் வழங்கினார்.

Tamil Nadu government offers house to writer Devi Bharathi

அதனை நேரில் வந்து பெற்றுக்கொண்ட எழுத்தாளர் தேவி பாரதி தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் சாமிநாதனை சந்தித்து நன்றி தெரிவித்தார்.