நடிகர் விஜய் சேதுபதிக்கு தமிழக அரசு பாதுகாப்பு வழங்கவேண்டும்; ரசிகர்கள் ஆர்ப்பாட்டம்!

 Tamil Nadu government have to give protection  Actor Vijay Sethupathi  Fans demonstrate

நடிகர் விஜய் சேதுபதியின் குடும்பத்தினரை குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாக செய்தி வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருவாரூரில்ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி திரைப்படம் எடுக்கப்பட இருந்தது. அந்தப் படத்திற்கு நடிகர் விஜய் சேதுபதி நடிக்க ஒத்துக்கொண்டதற்கு, தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரணும் “தமிழகத்தின் தலை சிறந்த கலைஞரின் எதிர்காலம் பாதிப்படையக்கூடாது அதனால், இப்படத்திலிருந்து விலகிக் கொள்ளுங்கள்” என அறிக்கை வாயிலாக விஜய் சேதுபதிக்கு வேண்டுகோள் விடுத்தார். அதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதி விலகுவதாக அறிவித்துள்ளார்.

இருந்தபோதும், விஜய்சேதுபதி குறித்தும் அவரது குடும்பத்தினர் மற்றும் மகள் குறித்தும் சமூக வலைதளங்களில் அவதூறாகச் செய்திகள் வெளியிட்டுப் பரபரப்பாக்கினர். இதற்குப் பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், திருவாரூர் பழைய பேருந்து நிலையம் எதிரே மாணவர் அமைப்பினரும் நடிகர் விஜய் சேதுபதியின் ரசிகர் மன்றத்தினரும் சேர்ந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில், அவதூறாகச் செய்தி வெளியிட்டு பரப்பியவர்களைக் கைது செய்து, கடும் நடவடிக்கைஎடுக்கவேண்டும் என்றும்விஜய் சேதுபதிக்கு உரியப் பாதுகாப்பை தமிழக அரசு வழங்கவேண்டும் என்றும் கோஷங்களை எழுப்பினர்.

Thiruvarur
இதையும் படியுங்கள்
Subscribe