காத்திருப்போர் பட்டியலில் இருந்த பல அதிகாரிகளுக்கு மீண்டும் மாநகராட்சிகளில் பணியிடம் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி திருச்சி மாநகராட்சி ஆணையராக இருந்த சிவசுப்பிரமணியன் தற்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருச்சி மாநகராட்சி ஆணையராக பணியாற்றிய சிவசுப்பிரமணியன், திண்டுக்கல் மாநகராட்சி ஆணையராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். செங்கல்பட்டு நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநராக இருந்த முஜிபூர் ரகுமான் திருச்சி மாநகராட்சி ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.