Advertisment

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி செய்தி சொன்ன தமிழக அரசு!

Untitled-3

விவசாயிகள் நலன் கருதி அவர்களது வருவாய் பெருக்கும் விதமாக தாங்கள் வளர்க்கும் கால்நடைகளை நல்ல விலைக்கு உரிய நேரத்தில் விற்பனை செய்ய சிறப்பு வசதியாக இணையத்தளம் உருவாக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

Advertisment

இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “விவசாயிகள் நலன் கருதி அவர்களது வருவாய் பெருக்கும் விதமாக தாங்கள் வளர்க்கும் கால்நடைகளை நல்ல விலைக்கு உரிய நேரத்தில் விற்பனை செய்ய சிறப்பு வசதியாக இணையத்தளம் உருவாக்கப்படும். இந்த இணையத்தளம் மூலம் கால்நடைகளில் சந்தை விலை நிலவரம் பல்வேறு சந்தைகளில் இருப்பு நிலவரம் உள்ளிட்டவை கால்நடை விவசாயிகளால் அறிந்து கொள்ள இயலும். இத்தகவல் மூலம் உரிய விலைக்கு கால்நடைகளை விற்று விவசாயிகளுக்கு பொருளீட்டும் வசதி ஏற்படுத்தப்படும். இப்பணிகளை தமிழ்நாடு கால்நடை மேம்பாட்டு கழகம் மூலம் செயல்படுத்தப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment
Announcement tn govt Farmers
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe