Tamil Nadu government decree to increase the family fund of journalists

பத்திரிகையாளர்களின் குடும்ப நிதியை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Advertisment

இது தொடர்பாக செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், 'சென்னை பத்திரிகையாளர் மன்றத்தினர் முதலமைச்சருக்கு விடுத்துள்ள பல்வேறு கோரிக்கைகளில் ஒன்றாக பத்திரிகையாளர்கள் மரணமடைந்தால் அவர்களுடைய குடும்பத்திற்கு வழங்கப்படும் நிவாரண நிதியினை ரூபாய் பத்து இலட்சமாக உயர்த்த வேண்டும் என கோரியிருந்தனர்.

Advertisment

அரசின் கவனமான பரிசீலனைக்கு பின்னர், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதியானது. பத்திரிகையாளர்கள் 20 ஆண்டுகள் பணிபுரிந்து, பணியில் இருக்கும் போது இயற்கை எய்தி விடுவார்களேயானால் அவர்களுடைய குடும்பத்திற்கு ரூ.10,00,000/- (ரூபாய் பத்து இலட்சம் மட்டும்) என்றும், 15 ஆண்டுகள் பணிபுரிந்து, பணியில் இருக்கும் போது இயற்கை எய்தி விடுவார்களேயானால் ரூ7,50,000/- (ரூபாய் எழு இலட்சத்து ஐம்பதாயிரம் மட்டும்) என்றும். 10 ஆண்டுகள் பணிபுரிந்து, பணியில் இருக்கும் போது இயற்கை எய்தி விடுவார்களேயானால் ரூ.5.00.000/- (ரூபாய் ஐந்து இலட்சம் மட்டும்) என்றும். 5 ஆண்டுகள் பணிபுரிந்து, பணியில் இருக்கும் போது இயற்கை எய்தி விடுவார்களேயானால் ரூ.2.50,000/- (ரூபாய் இரண்டு இலட்சத்து ஐம்பநாபிரம் மட்டும்) என்றும் நடைமுறையில் உள்ள விதிகளின்படி, பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதியினை உயர்த்தி வழங்கிட அரசு ஆணையிடுகிறது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.