Skip to main content

ஞாயிறு பொதுமுடக்கம் ரத்து..? - தமிழக அரசு தீவிர ஆலோசனை

Published on 27/01/2022 | Edited on 27/01/2022

 

கதச

 

தமிழகத்தில் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வரும் நிலையில், கரோனா தடுப்பு நடவடிக்கைள், கரோனா தடுப்பூசி போடும் பணிகள் ஆகியவற்றைத் தமிழ்நாடு அரசு துரித கதியில் முடுக்கிவிட்டுள்ளது. ஞாயிறு பொதுமுடக்கம், பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை,  இரவு நேர ஊரடங்கு, கோயில்களை விடுமுறை நாட்களில் மூடுவது போன்ற பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. இந்தக் கட்டுப்பாடுகள் அனைத்தும் வருகின்ற 31ம் தேதியோடு நிறைவடைய இருக்கிறது.

 

இந்நிலையில் வரும் 31ம் தேதிக்குப் பிறகு எந்த மாதிரியான நடவடிக்கைகளை எடுப்பது, கூடுதல் தளர்வுகள் அளிக்கலாமா என்பது குறித்து அதிகாரிகளோடு முதல்வர் தற்போது ஆலோசனை நடத்த இருக்கிறார். இதில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பு, இரவு மற்றும் ஞாயிறு பொதுமுடக்கம் ரத்து தொடர்பாக விவாதிக்க அதிகம் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. தமிழகத்தில் சிறிய அளவில் தினசரி தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. மேலும் வியாபாரிகள் ஞாயிறு பொதுமுடக்கத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகத் தொடர்ந்து வேதனை தெரிவித்து வருவதால் ஞாயிறு பொதுமுடக்கம் மட்டும் ரத்து செய்ய அதிக வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மாலையில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நாளை முதல் அரசியல், சமுதாய கூட்டங்களுக்கு அனுமதி!

Published on 02/03/2022 | Edited on 02/03/2022

 

ரகத

 

தமிழகத்தில் கரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், கரோனா தடுப்பு நடவடிக்கைள், கரோனா தடுப்பூசி போடும் பணிகள் ஆகியவற்றை தமிழ்நாடு அரசு துரித கதியில் முடுக்கிவிட்டுள்ளது. ஞாயிறு பொதுமுடக்கம், பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை,  இரவு நேர ஊரடங்கு, கோயில்களை விடுமுறை நாட்களில் மூடுவது போன்ற பல்வேறு கட்டுப்பாடுகளைத் தமிழக அரசு கடந்த ஜனவரி மாதம் மூன்றாவது வாரம் வரை நடைமுறையில் வைத்திருந்தது.

 

இதற்கிடையே ஜனவரி மாதம் இறுதியில் பெரும்பாலான கட்டுப்பாடுகளைத் தமிழக அரசு விலக்கிக்கொண்டது. இதனால் பள்ளி, கல்லூரிகள் முதல் அனைத்து விதமான தொழில் நிறுவனங்களும் முழு வீச்சில் இயங்கி வந்தன. ஆனால், பொதுமக்கள் அதிகம் கூட வாய்ப்புள்ள அரசியல் கூட்டங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை தொடர்ந்து நடைமுறையிலிருந்து வந்தது.

 

இந்நிலையில் நாளை முதல் அரசியல், சமுதாய கூட்டங்களுக்குத் தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இறப்பு நிகழ்ச்சிகளில் 250 பேர் வரையிலும், திருமண நிகழ்ச்சிகளில் 500 பேர் வரை பங்கேற்கலாம் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும், பொதுமக்கள் பொது இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிந்துகொண்டு, சமூக இடைவெளியை  கடைபிடிக்க வேண்டும் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

 

 

Next Story

முடிவுக்கு வருமா இரவு நேர ஊரடங்கு...?-நாளை மறுநாள் முதல்வர் ஆலோசனை!

Published on 25/01/2022 | Edited on 25/01/2022

 

Will the night time curfew end ...? - Chief Minister's advice tomorrow!

 

தமிழகத்தில் இன்று ஒருநாள் கரோனா பாதிப்பு என்பது 30,055 ஆக பதிவாகியுள்ளது. நேற்று  30,215 ஆக பாதிப்பு பதிவான நிலையில் இன்றைய ஒருநாள் பாதிப்பு குறைந்துள்ளது. இன்று கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 30,039 பேர் தமிழகத்திலும், மீதம் உள்ள 16 பேர் வெளிநாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. இந்த ஆண்டின் முதல் நாளான ஜனவரி ஒன்று கரோனா பாதிப்பு 1,48,469 ஆக இருந்தது. இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 1,,282 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.

 

சென்னையில் மட்டும் இன்று 6,241 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. நேற்று சென்னையில் கரோனா ஒருநாள் பாதிப்பு என்பது 6,383 என்று இருந்த நிலையில், இன்று குறைந்துள்ளது. இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி தமிழகத்தில் ஒரேநாளில் 48 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 37,312 ஆக அதிகரித்துள்ளது. இதில் அரசு மருத்துவமனையில் 22 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 26 பேரும் உயிரிழந்துள்ளனர்.

 

Will the night time curfew end ...? - Chief Minister's advice tomorrow!

 

தமிழகத்தில் இரவு நேர பொதுமுடக்கம், வார இறுதி நாள் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், தமிழகத்தில் இரவு நேர பொதுமுடக்கம் தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் (ஜனவரி 27ம் தேதி) ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த ஆலோசனைக்குப் பிறகே தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பது தொடர்பான தகவல்கள் தெரியவரும்.