Advertisment

திருச்சி கண்டோன்மெண்ட் காவல் நிலையத்திற்கு தமிழ்நாடு அரசு விருது! 

Tamil Nadu Government Award for Trichy Cantonment Police Station!

Advertisment

தமிழகத்தில் உள்ள காவல் நிலையங்களில் வழக்குகளை விரைவாக முடித்தல், புகாரின் மீது உடனடி நடவடிக்கை, குற்றவாளிகள் கைது, குற்றச்சம்பவம் நடைபெறாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை என சிறப்பாக செயல்படும் காவல் நிலையங்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சரின் சிறந்த காவல் நிலையம் பரிசு வழங்கப்படுவது வழக்கம்.

அந்த வகையில் சிறந்த காவல் நிலையமாக திருச்சி மாநகர கண்டோன்மெண்ட் காவல் நிலையம் தேர்வு செய்யப்பட்டு முதலமைச்சரின் பரிசினை வென்றுள்ளது. இதற்கான நினைவு கேடயத்தினை திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன், கண்டோன்மெண்ட் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சேரனிடம் வழங்கி பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் துணை கமிஷனர் முத்தரசு, கண்டோன்மெண்ட உதவி கமிஷனர் ஆகியோர் உடனிருந்தனர்.

police trichy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe