Published on 12/08/2021 | Edited on 12/08/2021

தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படும் சம்பவம் தொடர்ந்து நீடித்துவரும் நிலையில், மீண்டும் ஒரு தாக்குதல் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களை இலங்கை கடற்படையினர் கற்களைக் கொண்டு தாக்கி விரட்டியடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் படகுகளில் இருந்த வலைகளை வெட்டி சேதப்படுத்தியதால் பல லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். தொடர்ச்சியாக இலங்கை கடற்படையால் தமிழ்நாடு மீனவர்கள் தாக்கப்படுவதைத் தடுத்து நிறுத்த அரசு தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.