தமிழக நிதி அமைச்சர் காரை மறித்து தாக்கிய பாஜகவினர்!  

Tamil Nadu Finance Minister's car blocked and hit by BJP!

ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர் லட்சுமணனின் உடலுக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மதுரை மேயர், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில் லட்சுமணின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சென்னை திரும்புவதற்கு மதுரை விமான நிலையம் வந்தார். அப்போது, அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனின் காரை வழி மறித்து காலணி வீசப்பட்டது.

ராணுவ வீரர் லட்சுமணனின் உடலுக்கு அரசின் சார்பில் அஞ்சலி செலுத்திய பிறகு பாஜகவினர் அஞ்சலி செலுத்த வேண்டும் என்று கூறியதால் அங்கு பிரச்சனை ஏற்பட்டது. இதன் காரணமாக ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு புறப்பட்டபோது விமான நிலையத்தின் நுழைவு வாயிலில் பழனிவேல் தியாகராஜன் கார் மீது பாஜகவினர் காலணியை வீசி எறிந்தனர். இதையடுத்து அங்கிருந்தபாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உடனடியாக அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அதன்பின் அமைச்சரின் கார் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

madurai
இதையும் படியுங்கள்
Subscribe