Advertisment

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மத்திய அரசின் சட்ட நகல் எரிப்புப் போராட்டம்!

 Tamil Nadu farmers - Central government

மத்திய அரசு அத்தியாவசிய பொருட்களில் இருந்து உருளைக்கிழங்கு, வெங்காயத்தை நீக்கி சட்டம் இயற்றியது. இந்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும், இதனால் உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயத்தின் விலை அதிகமாக விற்பனை செய்யப்படும் என்றும் வெங்காயத்தையும், உருளையையும் பதுக்கி வைக்கும்சூழல் ஏற்படும். இதனால் விவசாயிகளுக்கும், பொது மக்களுக்கும் இதுமிகப்பெரிய ஆபத்தாக அமையும். எனவே இந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்பதைவலியுறுத்தி தமிழகம் முழுவதும் தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது.

Advertisment

இதன் ஒரு பகுதியாக புவனகிரி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட துணை தலைவர் சதானந்தம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர் மத்திய அரசின் சட்ட நகலை கிழித்து எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த போராட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் ராமச்சந்திரன், ஒன்றிய செயலாளர் காளி. கோவிந்தராஜ், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் மணி உள்ளிட்டவர்கள் சமூக இடைவெளிகளுடன் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

Advertisment

இதேபோல் கிள்ளையில் தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட துணை தலைவர் கற்பனைசெல்வம் தலைமையிலும், காட்டுமன்னார்கோவிலில் விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பிரகாஷ் தலைமையிலும் சட்ட நகல் எரிப்புஆர்பாட்டம் நடைபெற்றது.

Central Government Farmers Tamilnadu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe