Advertisment

வேளாண்சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் போராட்டம் அறிவிப்பு!

Tamil Nadu Farmers' Association announces struggle demanding repeal of agriculture law!

Advertisment

சிதம்பரத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் சங்கத்தின் முன்னாள் மாநில பொருளாளர் என்.ஆர் ராமசாமி நினைவு தினக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட துணைத்தலைவர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாவட்ட செயலாளர் மாதவன், தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாநிலத் துணைத் தலைவர் மூசா, விவசாய சங்க மாவட்ட நிர்வாகிகள் கற்பனைசெல்வம், மகாலிங்கம், மூர்த்தி. அகில இந்தியவிவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பிரகாஷ், துணைப் பொருளாளர் செல்லையா தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் வாஞ்சிநாதன், உள்ளிட்ட மாவட்ட அளவில் சங்கத்தின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்துகொண்டு என்.ஆர் ராமசாமி படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

கூட்டத்தில் மத்திய அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி நவம்பர் 5 அன்று கடலூரில் ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும், கோமுகி அணையில் இருந்து மணிமுத்தாறு ஆற்றில் வரும் தண்ணீரை சேலம் மாவட்டத்திற்கு கொண்டு செல்ல கோமுகி அணையில் இருந்து கைகான் வளைவு என்ற திட்டத்தை அமல்படுத்த தமிழக முதல்வர் ஏற்பாடு செய்து வருகிறார். இதனால் விருதாச்சலம் கம்மாபுரம் புவனகிரி ஒன்றியம் விவசாயிகளுக்க்கு மிகப்பெரிய பாதிப்பை உருவாக்கும் 25 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலத்திற்கு தண்ணீர் வருவது தடைப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது எனவே இதை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மக்காச்சோள விவசாயிகளுக்கு இன்சூரன்ஸ் பிரீமியம் தொகை கட்டுவதற்கான காலத்தை நீட்டிக்க வேண்டும். படைப்புழுவால் மக்காச்சோளம் பயிர் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே படைப்புழு அழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் பாதிக்கப்பட்ட நிலங்களை கணக்கெடுப்பு நடத்தி நிவாராணம் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். பயிர் இன்சூரன்ஸ் உள்ள குளறுபடிகளை நீக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

Advertisment

டெல்டா விவசாயிகளுக்கு 3 ஆண்டுகால நிலுவை இன்சுரன்ஸ் தொகையை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். கரும்பு பயிருக்கான ஊக்கத் தொகை டன் ஒன்றுக்கு ரூ13,750 தீபாவளிக்குள் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். நெல்லிகுப்பம் இஐடி ஆலையில் ஒரு சதவீதத்துக்கும் மேல் கழிவு பிடித்தம் செய்வதை தடுத்து நிறுத்தி,பிடித்தம் செய்த தொகையை திருப்பி வாங்கி கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அம்பிகா ஆரூரான் ஆலை கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகையை பெற்றுத் தர தமிழ்நாடு அரசு மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும்.

சம்பா பயிருக்கு கடைமடை வரை தண்ணீர் செல்ல பொதுப்பணித்துறை ஏற்பாடு செய்ய வேண்டும். குறிப்பாக திருச்சின்னபுரம் வாய்க்கால், குமரி வாய்க்கால், ராதா வாய்க்கால், சந்திரன் வாய்க்கால், பெருமாள் ஏரியை தூர்வார நெய்வேலி சமூக மேம்பாட்டு நிதியை பெற்று முழுமையாக தூர்வார ஏற்பாடு செய்ய வேண்டும். பண்ருட்டி மலட்டாறு தூர்வாரும் பணியை விரைந்து முடிக்க வேண்டும். பிரதமர் கிசான் திட்டத்தில் தகுதியான விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட தொகை பிடித்தம் செய்யப்பட்டுள்ளது மீண்டும் அவர்களுக்கு கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என தீர்மானம்நிறைவேற்றப்பட்டுள்ளது.

CHITHAMPARAM
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe