Tamil Nadu Election Officer advises on counting of votes!

சட்டமன்றத் தேர்தலுக்கானவாக்குப்பதிவு முடிவடைந்து வாக்கு எண்ணிக்கைக்காக தமிழகம் காத்திருக்கிறது. 'ஸ்ட்ராங் ரூம்' எனப்படும் கட்டுப்பாட்டு அறையில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. வரும் மே 2 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படஇருக்கிறது.

Advertisment

கரோனாபரவல் காரணமாக வாக்குப்பதிவேபல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடைபெற்ற நிலையில், வாக்கு எண்ணிக்கையைஎப்படிப் பாதுகாப்பாக நடத்துவது என்பது குறித்து மாவட்டத் தேர்தல் அதிகாரிகளுடன்தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யா பிரதா சாஹுஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்த ஆலோனைக் கூட்டத்தில் மருத்துவர்களும் பங்கேற்றுள்ளனர். வாக்கு எண்ணும் மையத்திற்கு வரும் ஏஜெண்டுகள், அதிகாரிகள் அனைவரும் கரோனாபரிசோதனை செய்யமுடியமா? அது சாத்தியப்படுமா? என்பது உட்பட பல விஷயங்கள் குறித்து இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாகதகவல்கள் வெளியாகியுள்ளன.