Advertisment

தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையம் அமைப்பு

Tamil Nadu E-Sports Commission Organization

Advertisment

தமிழ்நாட்டில் இணையவழி சூதாட்டத்தினை தடுக்கும் மற்றும் ஒழுங்குபடுத்தும் விதமாக, 2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு இணையவழி சூதாட்டத்தைத் தடைசெய்தல் மற்றும் இணையவழி விளையாட்டுகளை ஒழுங்குமுறைப்படுத்துதல் சட்டம் இயற்றப்பட்டது. அச்சட்டத்தின்படி, தலைவர் மற்றும் 4 உறுப்பினர்களை உள்ளடக்கிய தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையம் (Tamil Nadu Online Gaming Authority) ஒன்றினை அமைத்து கடந்த ஆகஸ்ட் 18 ஆம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டு அரசிதழில் வெளியிடப்பட்டது.

அதன்படி, இந்திய ஆட்சிப் பணியிலிருந்துஓய்வுபெற்ற அதிகாரி முகமது நசிமுதீன் தலைவராகவும், இந்திய காவல் பணியிலிருந்து ஓய்வுபெற்ற அதிகாரி எம்.சி. சாரங்கன், சென்னை கிண்டி பொறியியல் கல்லூரியின் ஓய்வுபெற்ற பேராசிரியர் சி. செல்லப்பன், போரூர் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியின் ஓய்வுபெற்ற உளவியல் மருத்துவர் ஓ. இரவீந்திரன், இன்கேஜ் குழு நிறுவனரும் மற்றும் தலைமைச் செயல் அலுவலருமான விஜய் கருணாகரன் ஆகியோர் உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டனர்.

இந்நிலையில் தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையம், கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் (15.09.2023) தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையம், முதல் மாடி, நகர்ப்புற நிர்வாக கட்டடம், எண்.75, சாந்தோம் நெடுஞ்சாலை, எம்.ஆர்.சி. நகர், ராஜா அண்ணாமலைபுரம், சென்னை-28 என்றமுகவரியில் செயல்படத் துவங்கியுள்ளது எனத்தமிழக அரசு சார்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chennai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe