Skip to main content

டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக புதிய துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பித்தவர்கள் யார் யார்?   

Published on 10/12/2018 | Edited on 10/12/2018
Tamil Nadu Dr. M.G.R. Medical University


தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத்தின் ‘ஊழல்’ துணைவேந்தர் டாக்டர் கீதாலட்சுமி 2018 டிசம்பர்-28 ந்தேதி ஓய்வுபெறுவதால் புதிய துணைவேந்தரையை நியமிப்பதற்கான தேடுதல் குழு (Search Committee) அமைக்கப்பட்டிருக்கிறது. பல்கலைக்கழக செனட் உறுப்பினர்களால் நியமிக்கப்பட்ட டாக்டர் செம்பொன் டேவிட், கவர்னிங் கவுன்சிலால் நியமிக்கப்பட்ட டாக்டர் மோகன் காமேஸ்வரன், தமிழக அரசால் நியமிக்கப்பட்ட டாக்டர் சிபியா ஆகிய மூன்றுபேர்கொண்ட தேடுதல் குழுதான் துணைவேந்தர்களை தேர்ந்தெடுக்கும் வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது.

 

tamilisai soundararajan

                                                                               செளந்தராஜன்



1)   டாக்டர் ஆல்ஃப்ரட் ஜாப் டேனியல்- வேலூர்

2)   டாக்டர்.டி. பாலசுப்பிரமணியன் -சென்னை

3)   டாக்டர் பாலசுப்பிரமணியன்  -சென்னை

4)   டாக்டர் பாரத் மன்சுலால் மோடி- குஜராத்

5)   டாக்டர் ஆர்.எம். பூபதி- சென்னை

6)   டாக்டர் டி.சி. சந்திரன் – சென்னை

7)   டாக்டர் சிதம்பரன் – அண்ணாமலை நகர் சிதம்பரம்

8)   டாக்டர் சித்ரா ஐயப்பன் – மதுரை

9)   டாக்டர் துரைசாமி- சென்னை

10) டாக்டர் எட்வின் ஜோ – (தமிழ்நாடு மருத்துவக்கல்வி இயக்குனர்) சென்னை
 

sudha

                                                                        சுதா சேஷய்யன்
 

11) டாக்டர் ஜமால் அப்துல் நாசர்(முன்னாள் பல் மருத்துவக்கல்லூரி முதல்வர்)

12) டாக்டர் கே.எஸ். கணேசன் – கோயம்பத்தூர்

13) டாக்டர் கோபிநாதன் – சென்னை

14) டாக்டர் ஜெயந்தி ( மெட்ராஸ் மருத்துவக்கல்லூரி முதல்வர்)

15) டாக்டர் வி. ஜெயராமன் – சென்னை

16) டாக்டர் ஜான்சி சார்லஸ்- மதுரை

17) டாக்டர் ஏ.எஸ். காமேஸ்வரராவ் – காக்கிநாடா கர்நாடகா

18) டாக்டர் சி. கருணாநிதி - கருணாநிதி

19)  டாக்டர் டி. மாருதி பாண்டியன் – மதுரை

20) டாக்டர் ஏ. மதன் மோகன் - காஞ்சிபுரம்

 

dr edwin joe

                                                                            எட்வின் ஜோ


21)  டாக்டர் மயில்வாகணன் நடராஜன் (டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப்பல்கலைக்கழக முன்னாள் முதல்வர்)

22)  டாக்டர்  கே. நமீதா புவனேஸ்வரி (அரசு கண் மருத்துவமனை

முன்னாள் இயக்குனர்)

 

23) டாக்டர் கே. பிச்சை பாலசண்முகம் – சென்னை

24) டாக்டர் எஸ். பொன்னம்பல நமச்சிவாயம் – சென்னை

25) டாக்டர் ஏ. ரத்தினவேல்- மதுரை

26) டாக்டர் எம்.எஸ். ரவி – சென்னை

27) டாக்டர் எஸ். ரேவதி – மதுரை

28) டாக்டர் ஜே. சண்முகம் – மதுரை

29) டாக்டர் பி. சரவணன் – சென்னை

30)  டாக்டர் ஜே.எஸ். சத்யநாராண மூர்த்தி

31) டாக்டர் பி. சேகர் – சென்னை

32) டாக்டர் கே. செல்வகுமார் – சென்னை

33) டாக்டர் டி.எஸ். செல்வவினாநயம் (பொது சுகாதாரத்துறை இணை இயக்குனர்)

34) டாக்டர் கே. சிவப்பிரகாசம்

35) டாக்டர் பி.செளந்தராஜன் (பா.ஜ.க. மாநிலத்தலைவர் தமிழிசையின் கணவர்)

36) சுதா சேஷய்யன் (டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழக முன்னாள்  பதிவாளர்)

37) டாக்டர் வள்ளிநாயகம் – சேலம்

38) டாக்டர் சி. வேணி –சென்னை

39) டாக்டர் ஆர். வெங்கட கிருஷ்ண முரளி – பெங்களூர் கர்நாடகா

40) டாக்டர் கே. விஜயசாரதி – சென்னை

41) டாக்டர் விமலா ( தமிழ்நாடு மருத்துவக்கல்வி முன்னாள் இயக்குனர்) ஆகிய 41 பேர் விண்ணப்பித்திருக்கிறார்கள்.  
 

மூன்று பேர்கொண்ட தேடுதல் கமிட்டியானது  41 பேரில் இறுதியாக மூன்றுபேர் கொண்ட பட்டியலை ஆளுநரிடம் கொடுக்கும். அந்த, மூன்று பேரில் பா.ஜ.க ஆதரவாளரான டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் இடம்பிடித்து அவரது பெயரையே ஆளுநர் தேர்ந்தெடுக்கப்போகிறார் என்கிற தகவல் வெளியாகியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

banwarilalpurohit



டாக்டர் செளந்தராஜன் திறமையான நல்ல மருத்துவர் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால், துணைவேந்தராக வருகிறவர்கள் நல்ல நிர்வாகத்திறமை படைத்தவர்களாக இருக்கவேண்டும். அந்த நிர்வாகத்திறமை இவருக்கு இருக்கிறதா என்பது கேள்விக்குறி. மேலும், பா.ஜ.க. ஆதரவாளர் என்கிற காரணத்துக்காக முன்னுரிமை கொடுத்து துணைவேந்தரை நியமிக்கவேண்டும் என்று முடிவுசெய்துவிட்டால் எதற்கு தேடுதல் கமிட்டி? நேரடியாகவே தேர்ந்தெடுத்துவிட்டு போகவேண்டிதானே? என்கிறார்கள் துணைவேந்தர் நியமனத்துக்காக விண்ணப்பித்த டாக்டர்கள்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

பெரியார் பல்கலை. பதிவாளர் விவகாரம்; உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி!

Published on 28/02/2024 | Edited on 28/02/2024
Periyar University Registrar Matters The High Court questions

'பியூட்டர் பவுண்டேஷன்' என்ற தனியார் நிறுவனத்தை தொடங்கி பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தராக இருக்கக்கூடிய ஜெகநாதன் மற்றும் பதிவாளர் பொறுப்பு வகித்த தங்கவேல், இணை பேராசிரியராகப் பணியாற்றி வந்த சதீஷ், பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியராக இருந்த ராம் கணேஷ் ஆகியோர் கல்விக் கட்டணம் பெற்று மோசடி செய்ததாக புகார்கள் எழுந்தன. இதனடிப்படையில் பெரியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்த தொழிலாளர் சங்க சட்ட ஆலோசகர் இளங்கோவன் கொடுத்த புகாரில் சேலம் கருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனை கைது செய்தனர். ஜாமீனில் வெளிவந்த ஜெகநாதன் மீண்டும் துணை வேந்தராகப் பணியாற்றி வருகிறார்.

அதே சமயம் பல்கலைக்கழகத்தின் பதிவாளராகவும் கணினி அறிவியல் துறைக்கு தலைவராகவும் பணியாற்றி வந்த தங்கவேல், தனது துறைக்குத் தேவையான கணினி, இணைய சேவைக்கான பொருட்களை வாங்கியதில் முறைகேடு செய்ததாகவும், ஆதிதிராவிடர் இளைஞர்களுக்கு நடத்தப்படும் திறன் மேம்பாட்டு பாடத் திட்டங்களில் பெரும் முறைகேடு நிகழ்ந்துள்ளதாகவும் புகார் எழுந்தது. இந்த முறைகேடு தொடர்பாக எழுந்த புகாரின் பேரில் தணிக்கைக் குழு ஆய்வு செய்திருந்தது. இந்த ஆய்வில் முறைகேட்டில் தங்கவேல் ஈடுபட்டது நிரூபணமானது.

அதன்பின்னர் பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேலை பணியிடை நீக்கம் செய்ய பல்கலைக்கழக துணை வேந்தருக்கு தமிழக அரசு கடந்த 7 ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது. பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த அமைக்கப்பட்ட அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் பழனிசாமி குழு அறிக்கை அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கான உத்தரவை தமிழக உயர்கல்வித் துறைச் செயலாளர் கார்த்திக் பிறப்பித்திருந்தார். இருப்பினும் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் பதிவாளர் தங்கவேலை பணியிடை நீக்கம் செய்யாமல் இருந்து வந்தார். இதற்கு ஆசிரியர் சங்கங்களை சேர்ந்தவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதனையடுத்து பதிவாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு கணினி அறிவியல் துறை தலைவராக உள்ளார். அதே சமயம் தங்கவேல் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் கேட்டு துணைவேந்தர் ஜெகநாதன் உயர்கல்வித் துறைக்கு கடிதம் எழுதி இருந்தார். இது தொடர்பாக தமிழக உயர்கல்வித் துறைச் செயலாளர் கார்த்திக், துணை வேந்தருக்கு மீண்டும் எழுதியிருந்த கடிதத்தில், “பதிவாளராக இருந்த தங்கவேலு மீதான குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்கள் அனுப்பப்பட்டுள்ளது. தங்கவேல் மீது 8 புகார்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே தங்கவேலுவை பணியிடை நீக்கம் செய்ய நடவடிக்கை எடுத்து அரசுக்கு தெரிவிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Periyar University Registrar Matters The High Court questions

இதற்கிடையே பணிநீக்கம் தொடர்பான உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பதிவாளராக இருந்த தங்கவேல் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்பு இன்று (28.02.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தங்கவேல் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஐசக் மோகன்லால், “பல்கலைக்கழகம் என்பது தனிச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டது. இதில் சிண்டிகேட், செனட் உறுப்பினர்கள் உள்ளனர். மனுதாரர் 34 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்டவர். நாளை ஓய்வு பெற உள்ள நிலையில் பணிநீக்கம் செய்வது தொடர்பான பரிந்துரை தங்கவேலுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே பணிநீக்கம் தொடர்பான பரிந்துரைக்கு தடை விதிக்க வேண்டும்” என வாதிட்டார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி இளந்திரையன், “உயர் கல்வித்துறை செயலாளரின் பரிந்துரை குறித்து பல்கலைக்கழக நிர்வாகம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது” எனக் கேள்வி எழுப்பினார்.

Periyar University Registrar Matters The High Court questions

இதற்குப் பதிலளித்த தற்போதைய பதிவாளர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சந்திரகுமார், “பணி நீக்கம் குறித்து பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் நிர்வாகம் தான் முடிவெடுக்க வேண்டும். இது தொடரான பரிந்துரை சிண்டிகேட் குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி, “நிதி முறைகேடு புகார் தொடர்பான விசாரணை அறிக்கையைத் தமிழக அரசு நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். உயர் கல்வித்துறை செயலாளரின் பரிந்துரை மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் துணைவேந்தர் தமிழக அரசிடம் விளக்கம் கேட்டது ஏன்? முறைகேடு புகார் தொடர்பாக சேலம் பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேல் மீது துணைவேந்தர் உரிய நடவடிக்கை எடுக்கலாம். மார்ச் 14 ஆம் தேதி இந்த வழக்கு தொடர்பான உத்தரவு பிறப்பிக்கப்படும்” எனத் தெரிவித்தார். பதிவாளராக இருந்த தங்கவேல் நாளையுடன் (29.02.2024) பணி ஓய்வு பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

பெரியார் பல்கலை. துணைவேந்தரின் ஜாமினை ரத்து செய்யக் கோரும் மனு; ஜனவரி 19இல் விசாரணை

Published on 12/01/2024 | Edited on 12/01/2024
Periyar University. Petition seeking cancellation of bail of Vice-Chancellor; Hearing on January 19

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக இருக்கும் ஜெகநாதன், போலி ஆவணங்கள் தயாரித்து தனியார் நிறுவனங்களிடம் புரிந்துணர்வு மேற்கொண்டதாகப் பெரியார் பல்கலைக்கழகத் தொழிலாளர் சங்கத்தின் சட்ட ஆலோசகர் இளங்கோவன் சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. பெரியார் பல்கலைக்கழகத்தின் சார்பில் கல்வி வழங்குவதற்காக துணைவேந்தரே தனி நிறுவனம் தொடங்கியிருப்பது விதிமீறல் என அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தப் புகாரின் பேரில் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் கருப்பூர் காவல்துறையினரால் கடந்த டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி மாலை 4 மணியளவில் கைது செய்யப்பட்டார். போலீசாரின் விசாரணையை அடுத்து பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன், சேலம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட மறுத்த மாஜிஸ்ரேட் தினேஷ்குமார், ஜெகநாதனுக்கு நிபந்தனையுடன் கூடிய இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டிருந்தார்.

இந்த இடைக்கால ஜாமீனை ரத்து செய்யக் கோரி சேலம் கூடுதல் ஆணையர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனு மீதான வழக்கு கடந்த 2 ஆம் தேதி (02-01-24) விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில், வழக்கு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், குற்றச்சாட்டுக்களுக்கு முகாந்திரம் உள்ளதாகக் கூறிய மாஜிஸ்திரேட், நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட மறுத்தது தவறு. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்துள்ளதால் சிறப்பு நீதிமன்ற அதிகாரத்தை மாஜிஸ்திரேட் எடுக்க முடியாது என வாதிட்டது.

Periyar University. Petition seeking cancellation of bail of Vice-Chancellor; Hearing on January 19

அனைத்து தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி, இந்த வழக்கில் தனிநபர் சுதந்திரம் சம்பந்தப்பட்டுள்ளதால் துணைவேந்தர் தரப்பு வாதங்களையோ, பாதிக்கப்பட்ட புகார்தாரர் தரப்பு வாதங்களையோ கேட்காமல் இந்த மனு மீது உத்தரவு பிறப்பிப்பது முறையாக இருக்காது என்று கூறி, ஜனவரி 12 ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி துணைவேந்தர் தரப்புக்கு உத்தரவிட்டார். மேலும், ஜாமீன் வழங்கியது தொடர்பாக விரிவான தாக்கல் செய்யும்படி மாஜிஸ்திரேட்டுக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை ஜனவரி 12 ஆம் தேதிக்கு தள்ளி வைத்திருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது துணைவேந்தர் ஜெகநாதன் ஜாமீன் ரத்து செய்யக் கோரிய வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டும். நிபந்தனை ஜாமீனில் உள்ள துணைவேந்தர் ஜெகநாதன் சாட்சிகளைக் கலைக்க வாய்ப்புள்ளது எனக் காவல்துறை சார்பில் வாதிடப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கை ஜனவரி 19 ஆம் தேதிக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிபதி நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.