தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத்தின் ‘ஊழல்’ துணைவேந்தர் டாக்டர் கீதாலட்சுமி 2018 டிசம்பர்-28 ந்தேதி ஓய்வுபெறுவதால் புதிய துணைவேந்தரையை நியமிப்பதற்கான தேடுதல் குழு (Search Committee) அமைக்கப்பட்டிருக்கிறது. பல்கலைக்கழக செனட் உறுப்பினர்களால் நியமிக்கப்பட்ட டாக்டர் செம்பொன் டேவிட், கவர்னிங் கவுன்சிலால் நியமிக்கப்பட்ட டாக்டர் மோகன் காமேஸ்வரன், தமிழக அரசால் நியமிக்கப்பட்ட டாக்டர் சிபியா ஆகிய மூன்றுபேர்கொண்ட தேடுதல் குழுதான் துணைவேந்தர்களை தேர்ந்தெடுக்கும் வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது.
செளந்தராஜன்
1) டாக்டர் ஆல்ஃப்ரட் ஜாப் டேனியல்- வேலூர்
2) டாக்டர்.டி. பாலசுப்பிரமணியன் -சென்னை
3) டாக்டர் பாலசுப்பிரமணியன் -சென்னை
4) டாக்டர் பாரத் மன்சுலால் மோடி- குஜராத்
5) டாக்டர் ஆர்.எம். பூபதி- சென்னை
6) டாக்டர் டி.சி. சந்திரன் – சென்னை
7) டாக்டர் சிதம்பரன் – அண்ணாமலை நகர் சிதம்பரம்
8) டாக்டர் சித்ரா ஐயப்பன் – மதுரை
9) டாக்டர் துரைசாமி- சென்னை
10) டாக்டர் எட்வின் ஜோ – (தமிழ்நாடு மருத்துவக்கல்வி இயக்குனர்) சென்னை
சுதா சேஷய்யன்
11) டாக்டர் ஜமால் அப்துல் நாசர்(முன்னாள் பல் மருத்துவக்கல்லூரி முதல்வர்)
12) டாக்டர் கே.எஸ். கணேசன் – கோயம்பத்தூர்
13) டாக்டர் கோபிநாதன் – சென்னை
14) டாக்டர் ஜெயந்தி ( மெட்ராஸ் மருத்துவக்கல்லூரி முதல்வர்)
15) டாக்டர் வி. ஜெயராமன் – சென்னை
16) டாக்டர் ஜான்சி சார்லஸ்- மதுரை
17) டாக்டர் ஏ.எஸ். காமேஸ்வரராவ் – காக்கிநாடா கர்நாடகா
18) டாக்டர் சி. கருணாநிதி - கருணாநிதி
19) டாக்டர் டி. மாருதி பாண்டியன் – மதுரை
20) டாக்டர் ஏ. மதன் மோகன் - காஞ்சிபுரம்
எட்வின் ஜோ
21) டாக்டர் மயில்வாகணன் நடராஜன் (டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப்பல்கலைக்கழக முன்னாள் முதல்வர்)
22) டாக்டர் கே. நமீதா புவனேஸ்வரி (அரசு கண் மருத்துவமனை
முன்னாள் இயக்குனர்)
23) டாக்டர் கே. பிச்சை பாலசண்முகம் – சென்னை
24) டாக்டர் எஸ். பொன்னம்பல நமச்சிவாயம் – சென்னை
25) டாக்டர் ஏ. ரத்தினவேல்- மதுரை
26) டாக்டர் எம்.எஸ். ரவி – சென்னை
27) டாக்டர் எஸ். ரேவதி – மதுரை
28) டாக்டர் ஜே. சண்முகம் – மதுரை
29) டாக்டர் பி. சரவணன் – சென்னை
30) டாக்டர் ஜே.எஸ். சத்யநாராண மூர்த்தி
31) டாக்டர் பி. சேகர் – சென்னை
32) டாக்டர் கே. செல்வகுமார் – சென்னை
33) டாக்டர் டி.எஸ். செல்வவினாநயம் (பொது சுகாதாரத்துறை இணை இயக்குனர்)
34) டாக்டர் கே. சிவப்பிரகாசம்
35) டாக்டர் பி.செளந்தராஜன் (பா.ஜ.க. மாநிலத்தலைவர் தமிழிசையின் கணவர்)
36) சுதா சேஷய்யன் (டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர்)
37) டாக்டர் வள்ளிநாயகம் – சேலம்
38) டாக்டர் சி. வேணி –சென்னை
39) டாக்டர் ஆர். வெங்கட கிருஷ்ண முரளி – பெங்களூர் கர்நாடகா
40) டாக்டர் கே. விஜயசாரதி – சென்னை
41) டாக்டர் விமலா ( தமிழ்நாடு மருத்துவக்கல்வி முன்னாள் இயக்குனர்) ஆகிய 41 பேர் விண்ணப்பித்திருக்கிறார்கள்.
மூன்று பேர்கொண்ட தேடுதல் கமிட்டியானது 41 பேரில் இறுதியாக மூன்றுபேர் கொண்ட பட்டியலை ஆளுநரிடம் கொடுக்கும். அந்த, மூன்று பேரில் பா.ஜ.க ஆதரவாளரான டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் இடம்பிடித்து அவரது பெயரையே ஆளுநர் தேர்ந்தெடுக்கப்போகிறார் என்கிற தகவல் வெளியாகியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
டாக்டர் செளந்தராஜன் திறமையான நல்ல மருத்துவர் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால், துணைவேந்தராக வருகிறவர்கள் நல்ல நிர்வாகத்திறமை படைத்தவர்களாக இருக்கவேண்டும். அந்த நிர்வாகத்திறமை இவருக்கு இருக்கிறதா என்பது கேள்விக்குறி. மேலும், பா.ஜ.க. ஆதரவாளர் என்கிற காரணத்துக்காக முன்னுரிமை கொடுத்து துணைவேந்தரை நியமிக்கவேண்டும் என்று முடிவுசெய்துவிட்டால் எதற்கு தேடுதல் கமிட்டி? நேரடியாகவே தேர்ந்தெடுத்துவிட்டு போகவேண்டிதானே? என்கிறார்கள் துணைவேந்தர் நியமனத்துக்காக விண்ணப்பித்த டாக்டர்கள்.