Tamil Nadu doctor nominated for Famous American Academy Award

அமெரிக்க நரம்பியல் அகாடமியின் 2022-ம் ஆண்டுக்கான ஏபி.பேக்கர் ஆசிரியர் அங்கீகார விருதுக்கு திருச்சியைச் சேர்ந்த நரம்பியல் நிபுணர் எம்.ஏ.அலீம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்க நரம்பியல் அகாடமி சார்பில் ஆண்டுதோறும் நரம்பியல் துறையில் சிறந்து விளங்கும் மருத்துவ நிபுணர்களுக்கு ஏ.பி.பேக்கர் ஆசிரியர் அங்கீகார விருது வழங்கப்பட்டு வருகிறது.

Advertisment

2022-ம் ஆண்டுக்கான விருதுக்கு திருச்சியை சேர்ந்த மூளை நரம்பியல் நிபுணர் திருச்சி அரசு மருத்துவ கல்லூரியின் ஓய்வுபெற்ற துணை முதல்வருமான மருத்துவர் அலீம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மருத்துவர் எம்.ஏ.அலீம் இந்திய நரம்பியல் அகாடமி மற்றும் கிளாஸ்கோவின் மருத்துவர்கள் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கான ராயல் கல்லூரி ஆகியவற்றில் உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment