Tamil Nadu DGP Shailendrababu Inspection at Chennai Central

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு ஆய்வு மேற்கொண்டார்.

Advertisment

வரும் 7 ஆம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வர இருக்கிறார். குறிப்பாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வந்தே பாரத் ரயில் சேவையை துவங்கி வைக்க இருக்கிறார். அதன் பிறகு சென்னையில் நடக்கும் மற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் பிரதமர் அங்கிருந்து நீலகிரி மாவட்டம் தெப்பக்காடு செல்ல இருக்கிறார்.

Advertisment

பிரதமர் தமிழகம் வர இருப்பதால் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை தமிழக போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நிகழ்ச்சி நடைபெற இருக்கும் இடத்திற்கு நேரில் சென்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாதுகாப்புப் பணிகளை ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது ரயில்வே கூடுதல் டிஜிபி மற்றும் சென்னை சட்ட ஒழுங்கு கூடுதல் ஆணையர் அன்பு உள்ளிட்ட பல்வேறு காவல்துறை உயர் அதிகாரிகள் இருந்தனர்.