Advertisment

ஆட்டோ ஓட்டுநரை நேரில் அழைத்துப் பாராட்டிய தமிழக டிஜிபி!

Advertisment

சென்னை ஈஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்த அண்ணாதுரை என்பவர் குடும்ப வறுமையின் காரணமாக தனது படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு கடந்த 20 வருடங்களாக ஆட்டோ ஓட்டுநராக இருந்து வருகிறார். இவர் தனது தொழிலை நேர்மையாகவும், புதுமையாகவும் செய்து இளைஞர்களுக்கும் தொழில்முனைவோருக்கும் முன்மாதிரியாக விளங்கி வருகிறார்.

தனது ஆட்டோவில் பயணிப்பவர்களுக்கு வை-பை, செய்தித்தாள்கள், வார இதழ்கள், டேப்லட், சிறிய குளிர்சாதனப்பெட்டி, சாக்லேட், ஸ்நாக்ஸ் என பல வசதிகளை இலவசமாக வழங்கி வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறார். மேலும் வாடிக்கையாளர்களிடம் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை மட்டுமே பெறுகிறார். இன்று (27.1.2022) ஆட்டோ ஓட்டுநர் அண்ணாதுரையை, தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு, டிஜிபி அலுவலகத்திற்கு நேரில் அழைத்துப் பாராட்டு தெரிவித்து சான்றிதழ் வழங்கினார்.

auto driver DGPsylendrababu Chennai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe